பின் தூங்கி முன் எழுவதை சிலர் பெருமையாகவே கூறிக் கொள்வது உண்டு. ஆனால் இது 6 மணி நேரத்திற்கும் குறைவாக போனால் மாரடைப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.நீங்கள் என்ன உண்கிறீர்கள், என்ன அருந்துகிறீர்கள் என்பது மட்டுமே உங்களது உடல் நலத்தை தீர்மானிக்கப் போவதில்லை. தூக்கமும் தான் என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்.
மாரடைப்பு உள்ளிட்ட இருதய சம்பந்தமான நோய்கள் குறித்து சமீப காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தூக்கமின்மையும் அதற்கு ஒரு முக்கிய காரணமாக உருவெடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.
லண்டனில் அண்மையில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் இரவில் ஆறு மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களுக்கு இருதய நோயால் அல்லது மாரடைப்பால் உயிரிழப்பதற்க்கு 48 சதவீதம் அதிக வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.இந்த ஆராய்ச்சி பெரு நகரங்களில் இயந்திர வாழ்க்கையில் உழலும் பின் தூங்கி முன் எழுபவர்களுக்கும் பொருந்தும் என்கிறார்கள் முன்னணி இருதய நோய் மருத்துவ நிபுணர்கள்.