2004ம் ஆண்டில் அமெரிக்காவில் நாய் கடியினால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 2007ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 29 ஆக உயர்வடைந்துள்ளது. 2008ம் ஆண்டில் 26 பேரும், 2009ம் ஆண்டில் நாய் கடியினால் 33 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. உயிரிழந்தவர்களில் 45 வீதமானவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும், ஏனைய 55 வீதமானவர்கள் சிறுவர் சிறுமியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பிட் புல் ரக நாய்களே 67 வீதமான மரணங்களை ஏற்படுத்தியுள்ளன. றோட் வில்லர் நாய்களின் தாக்குதலினால் 12 வீதமானவர்கள் உயிரிழந்துள்ளனர். எனினும், சகல விதமான நாய்களும் ஆபத்தானவை.
1979ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 25 வகையான நாய்கள் கடித்தத்தில் 238 பேர் உயிரிழந்துள்ளன என நோய் தடுப்பு நிறுவக ஆய்வுத் தகவலொன்று சுட்டிக்காட்டுகின்றது.
இதற்கேற்ப, மிகவும் ஆபத்தான நாய்களின் பட்டியல் கீழே விபரிக்கப்பட்டுள்ளது.
1. டெல்மேஷன் (எடை: 40 � 70 பவுண்ட்கள்)
சிறந்த நுண்ணறிவுடைய மற்றும் நினைவாற்றலைக் கொண்ட மிருகங்களில் ஒன்றாக டெல்மேஷன் நாய்கள் விபரிக்கப்படுகின்றன. சுதந்திரமாக வாழக் கூடிய பழக்கமுடையவை. எவ்வாறெனினும் சில நேரங்களில் டெல்மேஷன் நாய்கள், மனிதர்கள் மீது கடுமையாக நடந்து கொள்ளும்.
2. பொக்ஸர் (எடை: 50 � 70 பவுண்ட்கள்)
துடிப்பான, சுருசுருப்பான நுண்ணறிவுடைய நாய்களாக பொக்ஸர் நாய்கள் கருதப்படுகின்றன. இந்த வகை நாய்கள் சுயமாக இயங்குவதற்கு அதிக நாட்டம் காட்டக் கூடியவை என்பதனால் இவற்றை பழக்குவது சவால் மிக்கது. பொக்ஸர் நாய்கள் இயற்கையாகவே அமைதியானவை.
3. ப்ரசா கனாரியோ (எடை: 80 � 115 பவுண்ட்கள்)
இந்தக் காவல் நாய்கள் எந்தவொரு இரையையும் தாக்கிக் கொல்லக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. அதீத பலமும், அச்சமற்ற தன்மையும் இந்த நாய்களின் விசேட குணவியல்புகளாகும்.
4. டொபர்மான் பின்சர்ஸ் (எடை: 60 � 90 பவுண்ட்கள்)
நுண்ணறிவு, விசுவாசம் மற்றும் கண்காணிப்பு ஆகிய குணவியல்புகள் அதிகமாகக் காணப்படும் நாய் வகையாக டொபர்மான் பின்சர்ஸ் கருதப்படுகின்றது. இதனால் இந்த நாய் வகைகள் மிகச் சிறந்த காவல் நாய்களாக புகழ்பெற்றுள்ளன. தமது குடும்ப உறுப்பினர்கள் ஆபத்தில் இருக்கும் போதும், தேவையில்லாமல் கோபமூட்டும் போதும் இந்த வகை நாய்கள் கொடூரமாகத் தாக்குகின்றன.
5. ச்சோவ் ச்சோவ் (எடை: 50 � 70 பவுண்ட்கள்)
ச்வோவ் ச்சோவ் நாய்கள் தனித்துவமான மற்றும் சுதந்திரமான நாய் வகையாகும். எனினும், இவற்றை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சரியான முறையில் வளர்க்காவிட்டால் இவை கொடூரமான நாய்களாக மாற்றமடையக் கூடும்.
6. அலஸ்கான் மாலாமுட்டிஸ் (எடை: 75 � 100 பவுண்ட்கள்)
அலஸ்கான் மாலாமுட்டிஸ் நாய்களை சந்தோஷமாக வைத்திருக்க அதிகளவு சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும், அவை கவலையடைந்தால் கட்டகளை கேட்காது. சுருசுருப்பானதும், பலமானதுமான நாய்களாக இந்த வகை நாய்களை குறிப்பிடலாம்.
7. ஹஸ்கீஸ் (எடை: 44 � 66 பவுண்ட்கள்)
ஹஸ்கீஸ் ரக நாய்கள் சிறந்த நுண்ணறிவையும், வலிமையையும் கொண்டுள்ள போதிலும் இவற்றை சிறந்த காவல் நாய்களாக கருத முடியாது. 1979ம் ஆண்டு முதல் 1997ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இந்த நாய்கள் கடித்த 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
8. ஜெர்மன் ஸ்பெர்ட்ஸ் (எடை: 70 � 100 பவுண்ட்கள்)
விழிப்பானதும், புத்திசாதூரியமானதுமான நாய்களாக இந்த ரக நாய்கள் கருதப்படுகின்றன. இந்த வகை நாய்கள் அச்சமின்றி செயற்படக் கூடியவை. இதன் காரணமாக காவல்துறையினர் இந்த நாய்களை தமது பணிகளில் பயன்படுத்துகின்றனர். கே-9 காவல்துறையினர் ஜெர்மன் ஸ்பெர்ட்ஸ் நாய்களை தமது நடவடிக்கைகளில் பயன்படுத்துகின்றனர்.
9. றோட்விய்லர்ஸ் (எடை: 100 � 130 பவுண்ட்கள்)
இந்த வகை நாய்கள் கடுமையான சுபாவத்தைக் கொண்டவை. றோட்விய்லர்ஸ் நாய்கள் அதிகளவில் காவல் பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
10.பிட்புல்ஸ் (எடை: 55 � 65 பவுண்ட்கள்)
எதிரிகளை கடுமையாகத் தாக்கக் கூடிய அச்சமற்ற நாய்களாக பிட்புல்ஸ் நாய்கள் கருதப்படுகின்றன. இதன் காரணமாக இவை நாய் சண்டைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நாய்கள் மனிதர்களை கொலை செய்யும் அளவிற்கு ஆக்ரோசமானவை.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF