Sunday, May 29, 2011

கண்ணை இழந்தவர்கள் எவ்வாறு நாவாலும் காதாலும் பார்க்கலாம்? வெளியாகியுள்ள மூளை பற்றிய புதிய தகவல்கள்.


கண் குருடாய் இருந்தால் என்ன? நாவாலும், காதாலும் பார்க்கலாம் என்று சொன்னால் நம்புவீர்களா? இதை ECHOLOCATING என்று குறிப்பிடுகின்றனர். வௌவால்களும், டொல்பின்களும் இந்த முறையைத் தான் உபயோகப்படுத்துகின்றன. இந்த உயிரினங்களும் பார்வையற்ற சில மனிதர்களும் அளவு, அமைவிடம், சுற்றாடல், அதன் பண்புகள் என்பனவற்றைப் புரிந்து கொள்ள இந்த முறையைத் தான் கையாளுகின்றனர். 

இவற்றை உணர்ந்து கொள்ள பிரதானமாகக் கை கொடுப்பது ஓசையாகும். மனிதர்களைப் பொறுத்தமட்டில் நாவின் அசைவிலிருந்து எழும் ஓசை மற்றும் தெறித்து வரும் ஓசை அல்லது எதிரொலி என்பன இதில் பிரதானமானதாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்வையற்றவர்கள் தாம் இருக்கின்ற சூழலின் பின்புலத்தை உணர்ந்து கொள்கின்றனர். 

பார்வையற்றவர்கள் இவ்வாறு பின்புலத்தை உணர்ந்து கொள்ள தங்களது ஓசை உணர்வு செயற்பாட்டைப் பிரயோகிக்கின்ற போது, அவர்களின் மூளை கண் பார்வை உள்ள ஒருவர் பார்த்து உணர்ந்து கொள்ளும்போது எப்படி தொழிற்படுகின்றதோ அதற்குச் சமமாகவே செயற்படுகின்றது என்பது நவீன ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. ஒன்ராறியோ மேற்கு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதனைக் கண்டு பிடித்துள்ளனர். 

ஏதோ ஒரு காரணத்தால் உடல் உறுப்பு ஒன்று செயல் இழந்து உதாரணத்துக்கு ஒரு கண் செயல் இழந்து அதன் காரணமாக அதனோடு தொடர்புடைய மூளையின் பகுதி வெற்றிடமாகின்ற போது, மூளையின் அந்தக் குறிப்பிட்டப் பகுதி வேறு கட்டளைகளைப் பெற்று செயற்படக் காத்திருக்கின்றது. 
இதனால் செவி வழியாக அவர்களுக்குக் கிடைக்கும் தகவல் கண் வழியாகப் பெறும் தகவலை மாற்றி உணர வைப்பதுபோல் உணரச் செய்யப்படுகின்றது, என்று மூளையின் செயற்பாடு பற்றிய தங்களது புதிய கண்டுபிடிப்புக்கு ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர். கண் பார்வையற்றப் பலரைப் பயன்படுத்தியே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF