ஜெர்மனியை சேர்ந்த இன்ஜினியர்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை தயாரித்துள்ளனர். ஒருமுறை சார்ஜ் செய்தால் 32 கி.மீ போகலாம்.
"டிபி ஸ்கூட்" என பெயரிடப்பட்டுள்ள இதற்கு மிக குறைந்த செலவே ஆகிறதாம்.
புதிய ஸ்கூட்டர் குறித்து தயாரிப்பாளர்கள் கூறியதாவது: சுற்றுச்சூழலை மாசுபடுத்தக்கூடாது. சார்ஜ் செய்வது சுலபமாக இருக்க வேண்டும். சாதாரண மக்களும் வாங்குகிற அளவுக்கு விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு மினி பைக் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டோம்.இதைத் தொடர்ந்து தற்போது "டிபி ஸ்கூட்" தயாரித்துள்ளோம். இதன் மின்சார பயன்பாடு 1000 வாட். இதில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின் கொஞ்சம்கூட சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது.
தேவையற்ற நேரத்தில் மடித்து கையில் எடுத்துச் சென்று விடலாம். இதற்கு வசதியாக 132 செ.மீ. நீளம், 35 செ.மீ. அகலம், 62 செ.மீ. உயரத்தில் தயாரித்துள்ளோம். சார்ஜ் செய்வதும் எளிது. மொபைல் போன் போல எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.ஒரு மைல் அதாவது சுமார் 1.6 கி.மீ. பயணம் செய்ய வெறும் 7 பைசா மட்டுமே செலவாகும். மேக்ஸ்மிலன் 2, பெர்டினண்ட் 2 என்ற இரு மாடல்களில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை 1330 யூரோ பவுண்டு. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சில மாற்றங்களையும் இந்த பைக்கில் செய்து கொள்ள முடியும்.
எளிதாக சார்ஜ் செய்து கொள்ளும் வசதி, குறைந்த செலவு, மடித்து வைத்துக் கொள்வது என அவற்றில் இல்லாத வசதிகள் டிபி ஸ்கூட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.