உலகின் சக்தி மையம் என்று அமெரிக்கா பற்றிக் குறிப்பிடுகிறார்கள். உலகத் தலைவர்களில் எவர் வலுவிலும் அதிகாரச் சிறப்பிலும் உயர்ந்தவர் என்று பார்த்தால் அது அமெரிக்க அதிபராக மாத்திரம் இருக்க முடியும். படைபலம், பொருளாதார பலம், தலைமைத்துவப்பலம் அதிபர் பதவிக்கு வலுவூட்டுகின்றன.
49 வயதினரான பராக் ஒபாமா சொந்தப் பணமோ குடுப்பப் பின்னணியோ இல்லதரதவர். வெளள்ளைத் தாய்க்கும் கறுப்பினத் தந்தைக்கும் ஒற்றைப் பிள்ளையாகப் பிறந்தவர். அவருடைய தந்தையின் மதம் இஸ்லாம். இது பற்றிய சர்ச்சை அதிபர் ஒபாமாவின் கீர்த்தியைக் குறைத்துள்ளது. அவர் மதத்தைப் பெரிது படுத்தாத கிறிஸ்தவர் என்பது அண்மையில் தெரிய வந்துள்ளது.அவர் அமெரிக்காவுக்கு வெளியே பிறந்தவர் என்றும் இதன் காரணமாக அமெரிக்க அரசியல் சாசன விதிப்படி அதிபர் பதவி வகிக்கத் தகுதியற்றவர். என்று சென்ற மாதம் வரை விமர்சனம் செய்யப்பட்டது. மௌவுனமாக இருந்தவர் திடீரென்று தனது பிறப்புச் சான்றிதழை வெளியிட்டார். அவர் அமெரிக்காவின் 50ம் மாநிலமான ஹாவாய் தீவில் பிறந்தவர்.
பல பின்னடைவுகளை எதிர்கொண்டு தனது திறமை காரணமாக முன்னுக்கு வந்த ஒபாமா அவருக்குச் சாதகமாக வீசிய அலை மூலம் அதிபர் பதவியைக் கைப்பற்றியுள்ளார். கல்வித்திறமை, உறையாற்றும் திறமை எழுத்துத்திறமை இதுதான் என்று தொட்டுக்காட்ட முடியாத ஆளுமைத்திறமை அவரிடமுண்டு.பதவிக்கு வரும்போது இருந்த பிரமாண்டமான செல்வாக்கு படிப்படியாகச் சரிந்து விட்டது. நவம்பர் 11.2010 ரைம் இதழில் இந்தச் சரிவுக்காரன காரணங்கள் ஆய்வு செயற்படுகின்றன. அவருடைய பெயரும் புகழும் எங்கே போய்விட்டன என்ற கேள்வியை மக்கள் கருத்துக் கணிப்புக்களின் அடிப்படையில் ரைம் கேள்விக் கணை தொடுத்துள்ளது. நாட்டுப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியாதவர் என்று முடிவு கட்டப்பட்டது.
தேர்தல் மூலம் பதவிக்கு வரும் அரசியல் தலைவர்கள் அடுத்த தேர்தல் எப்படி வெற்றி வாகை சூடலாம் என்பதில் குறியாக இருப்பார்கள். அடுத்த தேர்தல் பற்றிச் சிந்தித்துச் செயற்படும் பெருந்தலைவர்கள் தற்காலிக வீழ்ச்சி அடைந்தாலும் வரலாற்றில் வாழ்வார்கள் என்று அரசியல் நோக்கர்கள் அறியிட்டுக் கூறுகிறார்கள்.மே 02, 2011ல் வெளிவந்த ரைம் சஞ்சிகை உலக நிகழ்வுகளை இயக்கிய பல்துறை 100 பேரைத் தெரிவு செய்து பட்டியலிடட்டுள்ளது. இதில் இறுதிப் பத்துப் பேரில் ஒருவராக அதிபர் ஒபாமா இடம் பெறுகிறார். ஒரு முக்கியமான குறிப்பை ஒபாமா பற்றி ரைம் ஆசிரியர்கள் தந்துள்ளார்கள்.
இரண்டாம் உலகப் போரை வழி நடத்திய முன்னாள் அமெரிக்க அதிபர் பிராங்க்லின் டெலானோ ரூஸ்வெல்ற் போன்ற தூர நோக்கு உள்ளவர் என்று ஒபாமா பற்றி இந்த இதழில் சொல்லப்பட்டிருக்கிறது. நாட்டின் முன்னேற்றத்திற்குத் தேவையான நிதித்துறைக் கட்டுப்பாடுகளை விதிக்கும் ஒபாமா தற்காலிகச் செல்வாக்கை மாத்திரம் இழந்துள்ளார். அவருக்கு வரலாற்றில் இடமுண்டு என்கிறது இந்த இதழ்.
மே 02 2011ம் ஒபாமாவின் புகழ் அவர் வழிநடத்திய ஒசாமா பின்லாடனின் படுகொலைக்குப்பிறகு பன்மடங்காக உயர்ந்துள்ளது. பத்து வருடங்களுக்கு மேலாகத் தேடப்பட்ட அமெரிக்காவின் முதலாம் எதரி என்ற ஒசாமாவின் கொலை அவரை புகழின் அச்சாணிக் கொப்பில் தூக்கி வைத்துள்ளது.
100 பேரைப் பட்டியலிடும் இதழ் ஒசாமாவின் அழிப்பிற்கு முன்பு தயாரிக்கப்பட்டது. ஒரு வாரம் பிந்தியிருந்தால் அதிபர் ஒபாமா 100 பேரில் முன்னணி இடம் பிடித்து விடுவார். கருத்துக் கணிப்புக்கள் அவருடைய செல்வாக்கு உயர்வைக் காட்டுகின்றன.
ஒபாமாவுக்கு முன்னர் பதவி வகித்த ஜோர்ஜ் புஷ் அமெரிக்க அதிபர்கள் உலக மக்களால் வெறுக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக விளங்கினார். பிற நாட்டுத் தலைவர்களைப் புஷ் மதித்து நடப்பதில்லை. அமெரிக்காவால் தனித்தியங்க முடியும் என்ற முரட்டுப் பிடிவாதம் அவரிடம் இருந்தது.
விடுதலைப்போர் புஷ் பயங்கரவாதமாகப் பார்த்தார். இந்த வருடம் நடந்த டூனிசீயா, எகிப்து புரட்சிகளில் ஒபாமா மக்கள் பக்கம் சாய்ந்துள்ளார். லிபியாவில் புரட்சிக் குழுக்களுக்கு ஆதரவு வழங்குகிறார்.
ஈழத்தமிழர்களைப் பொறுத்தளவில் ஒபாமா நிர்வாகம் இன்னும் மக்கள் விருப்புக்கு அங்கீகாரம் வழங்கும் சமிக்கைகளை உருவாக்கிய அல்- கயிடா இயக்கம் 1996ல் அமெரிக்காவுக்கு பின்வரும் எச்சரிக்ககையை விடுத்தது. இஸ்ரேயிலுக்கு ஆதரவாகவும் பலஸ்தீனர்களுக்கு எதிராகவும் அமெரிக்கா செயற்படக் கூடாது. இது தான் அல்- கயிடாவின் முக்கிய கரிசனைகளில் ஒன்று.
ஒபாமா பாலஸ்தீனர்களுக்கு ஒரு தனி நாட்டை அமைத்துக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு உலகில் தோன்றியுள்ளது. 2011 முடியுமுன் பாலஸ்தீன நாட்டை உருவாக்கி அங்கீகரிக்குமாறு ஐநாவுக்குத் தட்டிக் கழிக்க முடியாத அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. இதற்கு ஒபாமா ஆவண செய்யத்தான் வேண்டும்.ஒபாமா பற்றிப் வரலாற்றுப் பதிவில் ஆட்சியாளர்களுக்குச் சாதகமாகச் செயற்படும் நாடு அமெரிக்கா என்ற இழிசொல்லைத் துடைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு இருக்கிறது. தேசிய நலன் எவ்வளவு முக்கியமோ அதேயளவு முக்கியத்துவம் மக்கள் நலனுக்குக உண்டு என்பது வெளிப்படை.