வெள்ளை நிற புத்தர் ஆலயம் தாய்லாந்தில் சிங்ராய் நகரத்தில் உள்ளது. இந்த ஆலயம் 1997 ம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறக்கோவிலை வடிவமைத்தவர் கோசிட்பிபட் என்பவர் ஆவார்.வெள்ளை நிறம் அமைதியையும் தூய்மையையும் வெளிப்படுத்துவதாகும். இதன் வடிவமைப்பு வெளிநாட்டு மக்களை கவர்ந்திழுக்க கூடியதாக உள்ளது.









