
பூமியைப் போல உயிரினங்கள் வாழ்வதற்கு உரிய வெப்பம், குளிர், தண்ணீர் போன்ற சூழ்நிலைகளை கொண்ட புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.இந்த கிரகம் சிவப்பு நிறத்தில் சிறியதாக உள்ளது. இதற்கு கிளிஸ் 581டி என்று பெயர். பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற கேள்விக்கு தற்பொழுது விடை கண்டறிந்துள்ளனர் விண்வெளி ஆய்வாளர்கள்.
வானவீதியில் 3 கிரகங்கள் உயிரினங்கள் வாழ சாதகமான சூழ்நிலைகளுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதில் இரு கிரகங்கள் இந்தப் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளால் மூன்றாவதாக தெரிவு பெற்ற கிளிஸ் 581டி கிரகம் நமது மனித இனத்திற்கு நம்பிக்கை அளிக்க கூடியதாக உள்ளது.
கிளிஸ் கிரகம் சூரியனுக்கு அருகாமையில் உள்ள கிரகங்களில் ஒன்றாக உள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பை பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஆய்வுக் கூட விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இவர்களது ஆய்வு அறிக்கை விண்வெளி இயற்பியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
கிளிஸ் 581 நட்சத்திரம் ஏற்கனவே பெரும் கவனத்தை ஈர்த்த கிரகம் ஆகும். 2007ம் ஆண்டு விஞ்ஞானிகள் வாழ்வியல் சூழ்நிலை உள்ள இரு கிரகங்கள் குறித்து குறிப்பிட்டு இருந்தனர். கிளிஸ் 581டி கிரகம் மிக குளிரான பகுதியாக இருக்கும் என துவக்கத்தில் கருதப்பட்டது.