ஐரோப்பிய கண்டம் அமைந்துள்ள புவியோட்டுப் பரப்பு ஆப்பிரிக்க கண்டம் அமைந்துள்ள புவியோட்டு பரப்பிற்குள் மூழ்கிச் செல்வதாகவும், இதனால் இயற்கை பேரிடர்கள் ஏற்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய புவியோடுகளின் அசைவுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர் வோர்டல் குறிப்பிட்டுள்ளார்.
30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்க கண்டம் அமைந்துள்ள புவியோட்டுப் பரப்பு, ஐரோப்பிய கண்டம் அமைந்துள்ள புவியோட்டு பரப்பிற்குள் மூழ்கிச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆப்பிரிக்கக் கடற்பரப்பில் காணப்பட்ட பாரியளவு கற்பாறைகள் ஐரோப்பிய நிலப்பரப்பிற்குள் நகர்ந்துள்ளது. ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய தரைக் கடற்பரப்பு பிரதேசத்தை நோக்கி ஆப்பிரிக்கக் கண்ட புவியோடு நகர்ந்தது.ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க கண்ட புவியோடுகள் நகர்வதனால் புவியோடுகளுக்கு இடையிலான அதிர்வழுத்தம் உயர்வடைந்து செல்கின்றது. மத்திய தரைக் கடற்பரப்பில் நில அதிர்வு அபாயம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு மத்திய தரைக் கடறப்பரப்பில் நில அதிர்வு ஏற்படக் கூடிய அபாயம் காணப்பட்ட போதிலும், அபாயம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவில்லை என ஆய்வாளர் வோர்டல் தெரிவித்துள்ளார்.புவியோடுகள் நகரும் வலயங்கள் ஒர் இரவில் உருவாகாது எனவும் அவை பல மில்லியன் ஆண்டுகளாக உருவாகி வருவதாகவும், இவை தொடர்பில் அவதானிக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில வேளைகளில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கலாம் எனினும், ஆபத்து ஏற்படாது என நிலைமைகளை குறைத்து மதிப்பீடு செய்துவிடக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.1908ம் ஆண்டில் இத்தாலியில் ஏற்பட்ட நில அதிர்வில் 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐரோப்பிய வரலாற்றில் மிகவும் மோசமான நில அதிர்வாக 1755ம் ஆண்டு போர்த்துக்களின் லிஸ்பனில் இடம்பெற்ற அதிர்வு கருதப்படுகின்றது.
இந்த நில அதிர்வுச் சம்பவத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை இந்த ஆய்வுத் தகவல்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என சில விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.இத்தாலியை அண்டிய புவியோடு கடந்த இரண்டு மில்லியன் ஆண்டுகளாக நகர்ந்து செல்வதாக இல்லியானோஸ் எவன்ஸ்டனில் அமைந்துள்ள நோர்த்வெஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டெத் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.