விண்வெளியில் கோடிக்கணக்கான விண்மீன்களும், பல கிரகங்களும் உள்ளன. இருந்தும் வானவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து தினந்தோறும் புது கண்டுபிடிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.இந்த நிலையில் விண்வெளியில் மிதக்கும் 10 புதிய கோள்கள் இருப்பதை சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இவை வியாழன் கோள் அளவில் உள்ளன.
25 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கோள்களை நியூசிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இக்குழுவில் சர்வதேச விஞ்ஞானிகளும் உள்ளனர்.