Sunday, May 29, 2011

இன்றைய செய்திகள்.

ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் கைவிடப்பட்ட இலங்கையின் போர்குற்ற விவகாரம்?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் நாளை தினம் ஆரம்பமாகவுள்ளன.இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளா பான் கீ மூனின் இலங்கை தொடர்பான நிபுணா குழு அறிக்கை கலந்துரையாடலுக்கு வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனுக்கும் இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி பாலித கோஹனவூக்கும் இடையில் ஏற்கனவே இது தொடர்பில் பேசு்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதில் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரைகளின்படி உள்ளூர்மட்ட விசாரணைகளை ஏற்கனவே இலங்கையின் நல்லணிக்க ஆணைக்குழு மேற்கொண்டு வருவதால் நிபுணர் குழு பரிந்துரைகளுக்கு பதிலளிக்க காலம் தேவை என்று பாலித கோஹன கோரியிருந்தார்.இதன் அடிப்படையிலேயே நாளை ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கையின் விடயம் எடுத்துக்கொள்ளப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க நிபந்தனைகளை நிறைவேற்ற இழுத்தடிக்கும் அரசு.
அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் முன்வைத்துள்ள நிபந்தனைகள் மற்றும் திட்டங்களை பின்பற்றுவது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் தீர்மானம் எதனையூம் மேற்கொள்ளவில்லை.கடந்த நாட்களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் ரொபாட் ஓ பிளக், இலங்கை பின்பற்ற வேண்டிய சில நிபந்தனைகளை தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அமெரிக்காவின் இலங்கை தூதுவர் பெட்ரிகா புட்டினிஸ் ஊடாக, வெளிநாட்டு அமைச்சர்  ஜீ.எல்.பீரிஸிடம் வலியூறுத்தப்பட்டது.
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு தொடர இந்த நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என ரொபர்ட் ஓ பிலக் வலியுறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் இலங்கை அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.
அத்துடன் இலங்கையில் காணப்படுகின்ற இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை முன் வைத்தல் மற்றும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றவற்றை நடைமுறைப்படுத்தல் என்பனவும் உள்ளடங்குகின்றன.இது தொடர்பில் அமைச்சர்  ஜீ.எல்.பீரிஸஷும் அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
எனினும் அரசாங்கம் அவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இதுவரையில் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியான அழுத்தங்களை சந்திப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நேரம் சரியில்லையாம் நாட்டைவிட்டு வெளியேறும் மேர்வின் சில்வா.
தமக்கு மோசமான காலப்பகுதி நடைபெற்று வருவதாக ஜோதிடர்கள் கூறியதற்கு அமைய அமைச்சர் மேர்வின் சில்வா நாட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.அவர் ஏற்கனவே தமக்கு ஆறு மாதங்களுக்கு சரியில்லை என கூறி வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தார்.எனினும் இலங்கையில் தயாரிக்கப்படுகின்ற சிங்கள திரைப்படம் ஒன்றில் சிங்கள மன்னனான துட்கைமுனுவாக நடிப்பதற்காக அவர் மீண்டும் இலங்கை திரும்பியிருந்தார்.
திரைப்படம் ஒலிப்பதிவு செய்துக் கொண்டிருந்த போது திடீரென யானை ஒன்று தாக்க முற்பட்ட வேளையில் அவரது பாதுகாவளர்களால் மீட்கப்பட்டார் மேர்வின்.இந்த நிலையில் ஜோதிடர் கூறியது போல தமக்கு நேரம் சரியில்லை என கருதி இத்தாலிக்கு சென்று அங்கு நடைபெறவிருந்த ஐ.நா எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொள்ள திட்டமிட்டிருந்தார்.
எனினும் மேர்வின் சில்வா கலந்துக் கொள்வதாக இருந்தால் அந்த ஆர்ப்பாட்டத்தில் தாம் கலந்துக் கொள்ள மாட்டோம் என இத்தாலிய சிங்களவர்கள் எச்சரித்தனர்.இதனை தொடர்ந்து அவர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொள்ளாமல் ஹோட்டல் அறையிலேயே தங்கி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கைக்கு மன்மோகன் சிங் எச்சரிக்கை.
வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு உடனடி தீர்வு ஒன்றை முன்வைக்க இலங்கை அராங்கம் தொடர்ந்தும் அழுத்தங்களை சந்திப்பதாக தெரிவிக்கப்படுகிறது.அதிகார பகிர்வு மற்றும் வட மாகாண உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்துதல் போன்ற அழுத்தங்கள் அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கப்படுகின்றன.
இதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படாத பட்சத்தில், ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக இலங்கைக்கான ஆதரவை இடைநிறுத்திக் கொள்ளப் போவதாக, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க எச்சரித்துள்ளதாக லக்பிம நிவ்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் இந்த நடவடிக்கைகள் பூர்த்தியாக வேண்டும் என மன்மோகன் சிங் வலியறுத்தியூள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில் அனைத்து மாகாணங்களுக்கும் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தவிர ஏனைய அதிகாரங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இலங்கை தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு பல்வேறு அழுத்தங்களை வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக இலங்கை தொடர்பில் இந்தியா விரைவான செயற்பாடுகளை காண்பிக்க வேண்டிய நிலையில் இருப்பதால் இலங்கை அரசாங்கத்துக்கு பாதகமான சூழ்நிலை ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக லக்பிம நிவ்ஸ் தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய உர்மியா ஏரி முற்றிலுமாக உறைந்து விடும் அபாயம்.
உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஏரியான ஈரானின் "உர்மியா" உப்பு ஏரி முதன்முறையாக முழுவதுமாக உறைந்து விட்டது.இதனால் ஏரி உள்ள பகுதியில் மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் மாற்றம் உருவாகக் கூடும் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஈரானின் மேற்கு அசர்பைஜான் மற்றும் கிழக்கு அசர்பைஜான் மாகாணங்களுக்கிடையில் 140 கி.மீ நீளமும், 55 கி.மீ அகலமும், 52 அடி ஆழமும் கொண்ட ஏரி உர்மியா ஏரி.மத்திய கிழக்கு பகுதியில் இது தான் மிகப்பெரிய ஏரி. உலகளவில் இது மூன்றாவது மிகப்பெரிய ஏரி. இதில் உள்ள தண்ணீரில் அதிகளவில் உப்பு இருப்பதால் உப்பு ஏரி என்று அழைக்கப்படுகிறது. சமீபத்தில் இந்த ஏரி முதன் முறையாக முழுவதுமாக உறைந்து விட்டது.
இந்த ஏரியை சுற்றி நடக்கும் ஆக்கிரமிப்புகள், ஏரிக்குள் விடப்படும் நச்சு கழிவுநீர் மற்றும் தவறான பாசனக் கொள்கைகள் அருகில் உள்ள ஆறுகளில் கட்டப்படும் பிரமாண்ட அணைகள், அப்பகுதியில் நிலவும் பஞ்சம் போன்றவற்றால் ஏரி தற்போது முன்பிருந்ததை விட 60 சதவீதமாக சுருங்கி விட்டது.
இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் ஏரி இருந்ததற்கான அடையாளம் கூட தெரியாமல் போய்விடும் என ஏற்கனவே நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த ஏரி உலக சுற்றுலா மையமாக உள்ளதால் அப்பகுதியின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது.ஆனால் சமீப காலமாக ஏரியின் உப்புத் தன்மை அதிகரித்துக் கொண்டே வருவதால் படகுகள் மற்றும் சிறு கப்பல்கள் ஏரியில் அவ்வளவு சுலபமாகச் செல்ல முடியவில்லை. இதனால் சுற்றுலாத் தொழில் மிகவும் நசித்து விட்டது.
தற்போது ஏரியே உறைந்து போய்விட்டதால் சுற்றுலாவை நம்பி வாழும் குடும்பங்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. உர்மியா ஏரியில் வீசும் சூறாவளி 600 கி.மீ.க்கு அப்பால் உள்ள பகுதிகளிலும் உப்பை வீசி வருவதால் விவசாயம் அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.அங்கு விளையும் ஆப்பிள், திராட்சை, முந்திரி, வெங்காயம், உருளைக்கிழங்கு மூலிகையிலிருந்து சாறு எடுத்து பல வகை பானங்களாக தயாரிக்கப்படுகின்றன. இப்போது பருவநிலை மாற்றத்தால் இவற்றின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
வெற்றிகரமாக பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பும் எண்டீவர் விண்கலம்.
விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆய்வு கூடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.அதில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அமெரிக்காவில் உள்ள நாசா விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ள எண்டீவர் விண்கலம் மூலம் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 16ந் திகதி அமெரிக்காவை சேர்ந்த ரான் காரான், ரஷியாவை சேர்ந்த அலெக்சாண்டர் சமோ குட்யாவ், ஆண்ட்ரே போரி சென்கோ ஆகிய 3 பேர் சென்றனர்.
இந்நிலையில் சர்வதேச விண்வெளிக்கு சென்ற எண்டீவர் விண்கலம் 2 வாரத்துக்கு பிறகு வருகிற 1ந் திகதி பூமிக்கு திரும்புகிறது. அதில் சமீபத்தில் அங்கு சென்ற 3 விண்வெளி வீரர்களும் மற்றும் அங்கு தங்கியுள்ள 6 விண்வெளி வீரர்களும் பயணம் செய்கின்றனர்.எண்டீவர் விண்கலம் இதுவரை 24 தடவை தனது பயணத்தை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் 25வது முறையாக விண்வெளிக்கு சென்றுள்ளது. இதுதான் அந்த விண்கலத்தின் கடைசி பயணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ் பெற்ற மோனாலிசா மொடல் அழகியின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு.
இத்தாலியில் மோனாலிசா மொடல் அழகியின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாறாத புன்னகை சிந்தும் மோனாலிசாவின் ஓவியத்தை லியோனார்டோ டா வின்ஸ்கி என்ற ஓவியர் வரைந்தார்.இந்த படத்தை வரைய பிரபல கோடீசுவரரும் பட்டு வியாபாரியுமான பிரான்சிஸ்கோ டெல் ஜியோகாண்டோவின் மனைவி லிசா கிரார்டினி மொடலாக இருந்தார்.
கடந்த 1542ம் ஆண்டு ஜூலை மாதம் தனது 63வது வயதில் மரணம் அடைந்தார். அவரது கல்லறை புளோரென்ஸ் நகரில் உள்ளது. அதை இத்தாலியின் பொலோக்னா பல்கலைக்கழக அகழ்வியல் ஆராய்ச்சியாளர்கள் தோண்டினர். அதில் இருந்து ஒரு பெண்ணின் மண்டை ஓடும், இடுப்பு எலும்பும் கண்டெடுக்கப்பட்டது.
அவை அநேகமாக மோனாலிசா படம் வரைய மொடலாக இருந்த லிசா கெரார்டினியினுடையதாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதை உறுதிப்படுத்த அவரது குழந்தைகளின் மண்டை ஓடுகளை வைத்து டி.என்.ஏ சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.இவர்களின் உடல்கள் புளோரென்ஸ் நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் புதைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: நேட்டோ ஜெனரல் காயம்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் உள்நாட்டு போர் நடந்து கொண்டே இருக்கிறது. அந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்தவும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் நேட்டோ படைகள் அங்கு முகாமிட்டுள்ளன.இந்த பன்னாட்டு படைப்பிரிவில் ஜேர்மனி வீரர்களும் உள்ளனர். ஆப்கானிஸ்தானின் தகார் மாகாணத்தில் தற்கொலைப்படை பிரிவினர் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 ஜேர்மனி வீரர்கள் மரணம் அடைந்தனர்.
இந்த பிராந்தியத்தில் நேட்டோ படைப்பிரிவின் தலைவராக ஜேர்மனி கமாண்டர் ஜெனரல் மார்கஸ் கெப் உள்ளார். இவரும் தாக்குதலில் காயம் அடைந்தார்கள். ஜேர்மனி வீரர்கள் மரணம் அடைந்த தகவலை ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் தாமஸ் டே மெய்ஸ்ரேவும் உறுதிப்படுத்தினார்.சனிக்கிழமை வடக்கு ஆப்கானிஸ்தானின் நகரமான தலோகனில் தற்கொலைப்படை தாக்குதலில் ஜேர்மனி வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் மேலும் 5 ஜேர்மனி வீரர்கள் காயம் அடைந்தார்கள்.
மனித வெடி குண்டு தாக்குதலில் வடக்கு ஆப்கானிஸ்தான் பொலிஸ் தலைவரான ஜெனரல் முகமது தாவுத் மற்றும் தகார் மாகாண பொலிஸ் தலைவர் ஷா ஜான் நூரி ஆகியோரும் உயிரிழந்தார்கள்.தற்கொலைப்படை தாக்குதலில் தகார் மாகாண கவர்னர் அப்துல் ஜபார் தாக்வா காயம் அடைந்தார். கவர்னருடன் நடந்த கூட்டத்தை நிறைவு செய்த நிலையில் ராணுவ அதிகாரிகள் புறப்பட்ட போது தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது.
ஜேர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்டர்வெலே தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மனித நேயமற்ற தலிபான் தாக்குதலுக்கு ஜேர்மனி அதிபர் ஏங்கலா மார்கெல் கடும் கண்டனம் தெரிவித்தார். தலிபான்களின் தற்கொலைப்படை தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 9 பேர் காயம் அடைந்தனர்.
ஜி8 மாநாட்டில் ஆப்பிரிக்காவுக்கு ஏமாற்றம்.
பிரான்சின் டெயுவிலேவில் தொழில் வளர்ச்சி அடைந்த 8 நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதன்முறையாக அரபு லீக் கூட்டமைப்பு அழைக்கப்பட்டிருந்தது.அதே போன்று 9 ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த மாநாடு அரபு நாடுகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் அமைந்தது. ஆனால் ஆப்பரிக்க நாடுகள் எதிர்பார்த்த அளவு முடிவு ஏற்படவில்லை. இதனால் ஆப்பரிக்க தலைவர்கள் ஏமாற்றத்துடனேயே நாடு திரும்பினர்.
மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி கூறுகையில்,"ஜி8 அமைப்பு வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சீரமைப்பு ஏற்பட 4 ஆயிரம் கோடி அமெரிக்க டொலர்களை அளிக்க விரும்புகிறது" என்றார்.அதே நேரத்தில் எகிப்து மற்றும் துனிஷியா நாடுகளில் சமூக மற்றும் அரசியல் மாற்றம் ஏற்படுவதற்காக 100 கோடி டொலர்கள் அளிக்க பிரான்ஸ் உறுதி கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மாநாட்டில் சப் சகா பகுதியை சார்ந்த தலைவர்கள் ஜாகப் சுமா(தென் ஆப்பிரிக்கா) மற்றும் ஐவரி நாட்டின் தலைவர் அலசானே ஒட்டாரா ஆகியோர் கலந்து கொண்டனர். ஜி8 மாநாட்டில் தீவிரமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை என்ற கவலை ஆப்பிரிக் தலைவர்களுக்கு இருந்தது.ஆப்பிரிக்கா மற்றும் மடாஸ்கர் நிகழ்வுகளில் தொடர்படைய பிர்மின் அடஜா ஹோசு கூறுகையில்,"மாநாட்டு முடிவு தமக்கு ஏமாற்றத்தை தருவதாக உள்ளது" என்றார்.
ஜி8 நாடுகள் ஆப்பிரிக்கா விடயத்தில் செயல்பட உறதி கொண்டு இருக்கலாம். இருப்பினும் பல நாடுகள் நிர்பந்தம் காரணமாக உரிய தீர்வு காணப்படவில்லை என்றார். வருகிற நவம்பர் மாதம் பிரான்சின் கடற்கரை வாசஸ்தலமான கேன்ஸ் பகுதியில் ஜி20 நாடுகள் மாநாடு நடைபெறுகிறது.இந்த மாநாட்டில் உலக பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
புள்ளி விவரங்கள் என்று வெளியிடப்படும் தகவல்கள் பெரும்பாலும் பொய்யானவை: டைம்ஸ் இதழ்.
ஒரு நாட்டில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக எடுக்கப்படும் புள்ளி விவரங்கள் தான் பல திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான அடிப்படை ஆதாரங்களாக அந்நாட்டு அரசுக்கு அமையும்.அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "டைம்ஸ்" இதழ் புள்ளி விவரங்கள் அனைத்தும் மிகச் சரியாக இருப்பதில்லை என்ற உண்மையைப் போட்டு உடைத்துள்ளது. அப்படி தவறாக வெளிவந்த புள்ளி விவரங்களில் மிகப் பிரபலமான ஐந்தே ஐந்து புள்ளி விவரங்களை எடுத்துக் கொண்டு சமீபத்தில் ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டது.
அந்த ஆய்வில் கூறப்பட்டிருப்பதாவது:
1. இந்தியாவில் 30 கோடி நடுத்தர வர்க்கத்தினர் வாழ்கின்றனர்: இது தவறு. உண்மையில் 2005ல் சர்வதேச நிறுவனமான "மெக்கின்சே" எடுத்த கணக்கெடுப்பின்படி 5 கோடி பேர் தான். 2015ல் இத்தொகை 25 கோடியை எட்டும். ஆனால் 30 கோடி நடுத்தர வர்க்கத்தினர் தற்போது இந்தியாவில் இருப்பதாகக் கூறப்பட்ட இந்தப் புள்ளி விவரத்தை ஐ.நா.வில் இருந்து அமெரிக்க அதிபர் வரை கூறியுள்ளனர்.
கடந்த 2005ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியா வந்த போது,"30 கோடி நடுத்தர வர்க்கத்தினர் உள்ள இந்தியா" என்று குறிப்பிட்டார். இந்தியா என்றைக்காவது ஒருநாள் 30 கோடி என்ற எண்ணிக்கையைத் தொடத் தான் போகிறது.
மெக்கின்சே தற்போது நடுத்தர வர்க்கத்திற்கான அடையாளமான ஆண்டுக்கு 1,96,920 (4,376 டொலர்) சம்பாதிக்க வேண்டும் என்று கணக்கிட்டுள்ளது. ஆனால் இந்தியா 30 கோடி பேர் நடுத்தர வர்க்கத்தினர் என்ற இலக்கை அடையும் போது இந்தியாவின் 78 சதவீதம் பேர் மெக்கின்சேயின் இலக்கை விடக் குறைவாகவே சம்பாதிக்க நேரிடலாம்.
2. கடந்த 1998-2002 காலகட்டத்தில் குடியரசு காங்கோவில் நிகழ்ந்த போரில் 54 லட்சம் பேர் பலியாயினர். இது 2ம் உலகப் போருக்குப் பின் நிகழ்ந்த போர்களில் மிக அதிகம். இதுவும் தவறு. போரில் நேரடியாக ஈடுபடுவோரைத் தவிர இடம் பெயர்தலால் ஏற்படும் பல்வேறு நோய்களால் இறப்பவர்களே அதிகம்.
அதுவும் காங்கோ போன்ற நாடுகளில் சுகாதாரம் என்பது மிகவும் மோசமான நிலையில் தான் உள்ளது. போரில் இறந்தோர் தொகையைக் கணக்கெடுப்பது மிகவும் சிரமமான பணி. எனினும் காங்கோ போரில் 10 லட்சம் முதல் 20 லட்சம் பேர் வரை இறந்திருக்கக் கூடும் என்று வேறு சில புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
3. தென் ஆப்ரிக்காவில் 30 லட்சம் ஜிம்பாப்வே அகதிகள் உள்ளனர்: தவறு. இப்புள்ளி விவரம் உலகம் முழுவதிலும் உள்ள பத்திரிகையாளர்கள், அரசுகளால் ஜிம்பாப்வேயின் பொருளாதார வீழ்ச்சியைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.அகதிகளைக் கணக்கெடுப்பதில் சிறந்த அமைப்பான "தென் ஆப்ரிக்க இடம்பெயர்தல் திட்டம்" என்ற அமைப்பு எடுத்த கணக்கெடுப்பின்படி தென் ஆப்ரிக்காவில் 8 லட்சத்தில் இருந்து 10 லட்சம் ஜிம்பாப்வே அகதிகள் உள்ளனர்.
4. சமீபத்தில் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தத்தால் வளரும் நாடுகளில் 10 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்படுவர். இது ஒரு ஊகமே. உண்மை நிலவரம் அல்ல. இந்த ஊகத்தை உலக வங்கி, ஐ.நா, ஐ.எம்.எப் என அனைத்தும் அங்கீகரித்துள்ளன. ஆனால் பொருளாதார மந்தம் என்பது பணக்கார நாடுகளில் மட்டுமே ஏற்பட்டது.பொருளாதார மந்தத்தால் ஆப்ரிக்காவில் உள்நாட்டுப் போர் மற்றும் நாடுகளுக்கிடையிலான போர் வரும் என்பது ஐ.எம்.எப்.பின் முன்னாள் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்கானின் கணிப்பு. ஆனால் அது பொய்த்து விட்டது. அங்கு தென் ஆப்ரிக்காவில் மட்டுமே பொருளாதார மந்தம் ஏற்பட்டது. பிற நாடுகளின் பொருளாதாரம் ஏறுமுகத்தில் தான் உள்ளது.
5. பத்து அமெரிக்கர்களில் ஒருவரிடம் மட்டுமே கடவுச்சீட்டு இருக்கும் என்பது உண்மையல்ல. கடைசியாக எடுத்த புள்ளி விவரப்படி மொத்த அமெரிக்க மக்கள் தொகையில் 37 சதவீதம் பேரிடம் கடவுச்சீட்டு உள்ளது.
பிரிட்டனில் 71 சதவீதம் பேரிடம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவில் சடவுச்சீட்டு எடுப்போர் தொகை அதிகரித்துள்ளது. உலகில் மிக அதிகளவு வெளிநாடுகளுக்குச் செல்லும் நாட்டினர் பட்டியலில் பிரிட்டிஷ் மக்கள், ஜேர்மானியர்களை அடுத்து மூன்றாவது இடத்தில் அமெரிக்கர்கள் உள்ளனர். ஆனால் சீனாவில் 1.5 சதவீதம் பேர் மட்டுமே கடவுச்சீட்டு வைத்துள்ளனர். இவ்வாறு அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியன்னா ஒப்பந்த ஷரத்துக்களை மீறிய அமெரிக்கா: தூதரக அதிகாரி குற்றச்சாட்டு.
இந்திய துணைத் தூதரக அதிகாரியின் மகள் விவகாரத்தில் வியன்னா ஒப்பந்த ஷரத்துகளை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தவறாக புரிந்து கொண்டுள்ளது.உண்மையில் இந்திய தூதரக அதிகாரிக்கான அதிகாரப் பாதுகாப்பு என்பது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் செல்லுபடியாகும் என நியூயார்க் இந்திய துணைத் தூதரகத் தலைவர் பிரபு தயாள் கூறியுள்ளார்.
அமெரிக்கா நியூயார்க் நகரம் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் துணைத் தூதரக அதிகாரியாக பணிபுரிபவர் தேபாஷிஷ் பிஸ்வாஸ். இவரது மகள் கிருத்திகா பிஸ்வாஸ்.
தான் படித்த பள்ளியில் ஆசிரியர்கள் பற்றி தரக்குறைவான மின்னஞ்சல்களை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இவ்விவகாரத்தில் கிருத்திகாவின் வக்கீல் ரவி பத்ரா கூறுகையில்,"அவர் தூதரக அதிகாரியின் மகள் என்பதால் அவருக்கு தூதரக அதிகார பாதுகாப்பு உண்டு. அதையும் மீறி அவர் கைது செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளார்" என்றார்.
இதை தனது பேட்டியில் கிருத்திகாவும் தெரிவித்திருந்தார். மேலும் ரவி பத்ரா,"வியன்னா ஒப்பந்தத்தின் படி இது போன்ற விவகாரங்களில் கைது செய்யப்பட்டவர் பற்றிய தகவல்களை அப்பகுதி நிர்வாகம் குறிப்பிட்ட தூதரகத்திற்கு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி தெரிவிக்கப்படவில்லை" என்றார்.கடந்த வார துவக்கத்தில் இதுகுறித்து பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவு துணை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர்,"ஒரு தூதரக அதிகாரியின் மகள் என்ற வகையில் அதிகார பாதுகாப்பை அவர் பெற முடியாது" என்று கூறியிருந்தார்.
கடந்த 1961ல் ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச நாடுகளின் தூதரக விவகார ஒப்பந்தத்தில் 36வது பிரிவில்,"சம்பந்தப்பட்ட தூதரகத்திற்கு இதுபோன்ற விவரங்களை உடனடியாக தாமதமின்றி தெரிவிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 37வது பிரிவில்,"தூதரக அதிகாரிகளுக்கான அதிகார பாதுகாப்பு அவர்களது குடும்பங்களுக்கும் பொருந்தும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இதுகுறித்து பேட்டியளித்த நியூயார்க் இந்திய துணைத் தூதரகத் தலைவர் பிரபு தயாள் கூறியதாவது: வியன்னா ஒப்பந்தத்தில் துணைத் தூதரக உறவுகள்(1963) பற்றிய பகுதியில் 53(2) பிரிவின்படி தூதரக அதிகாரியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது தனிப்பட்ட அலுவலர்கள் என இரு தரப்பினரும், அதிகாரிக்கான அனைத்து சலுகைகள் மற்றும் அதிகார பாதுகாப்பைப் பெறுவர். அதன்படி பொலிசார் கிருத்திகா பிஸ்வாசை கைது செய்திருக்கக் கூடாது.செய்யாத தவறுக்கு தன்னை பொலிசார் கைது செய்ததற்காக 1.5 மில்லியன் டொலர் இழப்பீடு கோரி கிருத்திகா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி பத்திரிகைகளில் இச்சம்பவத்தால் அவர் மிகவும் பிரபலமாகிவிட்டார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF