Sunday, May 29, 2011

விண்டோஸ் 7 இயங்குதளத்தில் முழு ஆற்றலையும் பயன்படுத்துவதற்கு.


கணணி பயன்பாட்டாளர்கள் பெரும்பாலும் விண்டோஸ் 7 இயங்குதளத்தையே பயன்படுத்துகின்றனர்.அவர்களுக்கு ஒரு பயனுள்ள தகவல். எல்லா கணணிகளிலுமே GRAPHICS சம்மந்தமான PROGRAMகளை இயக்கம் போது கணணி சிரமப்படுவதை உணரலாம். உதாரணத்திற்கு PHOTOSHOP, AFTER EFFECTS போன்றவற்றை குறிப்பிடலாம்.
அது போன்ற சிரமமான நேரங்களில் கணணியின் செயல்பாட்டு திறனை அதிகரிக்க WINDOWS 7ல் ஒரு வசதி மறைத்து வைக்கப்பட்டுள்ளது.இந்த வசதியை பயன்படுத்த CONTROL PANEL சென்று POWER OPTIONS என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது திறக்கும் WINDOWவில் SHOW ADDITIONAL PLANSல் உள்ள அம்பு குறியில் கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது HIGH PERFORMANCE என்பதை தேவு செய்து விட்டு வெளியேறவும். இனி நீங்கள் கடினமான PROGRAMகளை இயக்கும் போது முன்பை விட கணணி வேகமாக செயல்படுவதை உணரலாம்.இதற்காக உங்கள் கணணி வழக்கத்தை விட சற்று அதிகமாக மின்சாரத்தை செலவு செய்யும். சாதாரண PROGRAMகளை இயக்குகையில் மேற்கூறிய மாற்றங்களை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF