Monday, May 9, 2011

Paper Phone: கணம் இல்லாத புதிய கையடக்கத் தொலைபேசிகள் அறிமுகம் .


ஆரம்ப காலத்தில் செங்கல் அளவுக்கு இருந்த கைத்தொலைபேசிகள் இப்போது மெலிதாகி விட்டன.தீப்பெட்டி அளவுக்கு சிறிய அளவில் கைத்தொலைபேசிகள் வந்த போதிலும் மெல்லிய மொடல்களுக்கு கிராக்கி இருக்கத் தான் செய்கிறது.இதை நிறைவேற்றும் முகமாக பேப்பர் தடிமனில் ஏ.டி.எம் கார்டு போன்ற மெல்லிய கைத்தொலைபேசிகள் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.புதுமை விரும்பிகளுக்கு இது ரொம்ப பிடிக்கும் என்கின்றனர் கனடாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். ஆன்டாரியோ, கிங்ஸ்டனில் உள்ள க்வீன்ஸ் பல்கலைகழக இயக்குநர் டொக்டர் ரோயல் வெர்டிகால் இதை வடிவமைத்துள்ளார்.
புதிய மொடல் குறித்து வடிவமைப்பாளர் கூறியதாவது: பேப்பர் கைத்தொலைபேசியின் எடை மிகவும் குறைவாகவே இருக்கும். மெல்லிய பிலிமால் உருவாக்கப்பட்டுள்ள இதில் தற்போதைய ஸ்மார்ட் போனில் உள்ளதை விட அதிக வசதிகள் உள்ளது.புதிய பேப்பர் போன் பயன்பாட்டில் இல்லாத போது பற்றரி சார்ஜ் குறையாது. நீண்ட நேரம் இருக்கும். அடிக்கடி சார்ஜ் செய்யத் தேவையில்லை என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம். ஏராளமான தகவல்களை இதில் பதிவு செய்து கொள்ளலாம். இதன் திரை 9.5 செமீ அளவு கொண்டது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF