Wednesday, May 25, 2011

பயங்கர சூறாவளிக்கு பின் அமெரிக்கா.

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளில் மே 22ஆம் திகதி ஏற்பட்ட சூறாவளித் தாக்கத்தின் காரணமாக ஜொப்லின் மோ பகுதியைச் சேர்ந்த 100 பேர் இறந்துள்ளனர். 30 வீதமான நகரப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.பாரிய சேதங்கள் ஏற்பட்டதன் காரணமாக அங்குள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டிருந்தது. 2011ஆம் ஆண்டு இறப்பு வீதம் 455ஆக உள்ள அதேவேளை 1953ஆம் ஆண்டு முதல் இந்த சூறாவளித் தாக்கம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த சூறாவளி காரணமாக ஒரு மைல் அகலமான மற்றும் 4 மைல்கள் நீளமான பகுதிகளிலிருந்த வீடுகளும் வியாபார நிலையங்களும் சேதமடைந்துள்ளன.சூறாவளி காரணமாக சுப்பர்பன் சென். லூயிஸ் பார்க்கிலிருந்து கிட்டத்தட்ட 5 மைல்கள் தொலைவு வரை இருந்த வியாபாரத் தளங்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் கிழித்தெறியப்பட்டதுடன் பெரிய மரங்கள் பிடுங்கி வீசப்பட்டு மின்சாரக் கம்பிகளும் அறுந்துபோய் உள்ளன.






பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF