Wednesday, May 4, 2011

குழந்தைகள் உறக்கத்தில் தான் வளரும்: ஆய்வுத் தகவல்.


உறக்கத்தில் தான் குழந்தைகள் வளரும் என்று விஞ்ஞானிகள் ஆய்வொன்றின் மூலம் கண்டறிந்துள்ளனர்.இந்த வகையில் நடத்தப்பட்டுள்ள முதலாவது விஞ்ஞான ஆய்வில் இது தெரியவந்துள்ளது. குழந்தைகள் அன்றாடம் தூங்கும் நேரம், அவற்றின் உடல் வளர்ச்சி ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. அதிக நேரம் தூங்குவது உடலின் வளர்ச்சியை அதிகரிக்கின்றது என்பதை விஞ்ஞானிகள் முதற் தடவையாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
புதிதாகப் பிறந்த குழந்தைகள் பற்றி ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தவும், அவற்றின் உடல் வளர்ச்சி பற்றி தாய்மார் அறிந்து கொள்ளவும் இந்த புதிய ஆய்வின் முடிவுகள் வழியமைத்துள்ளன. அமெரிக்க விஞ்ஞானிகளே இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.குழந்தைகளை அதிகம் உறங்கச் செய்வது அவர்களின் உடல் வளர்ச்சியை உறுதி செய்கின்றது. தினசரி 4.5 மணிநேரம் மேலதிகமாக உறங்கும் குழந்தைகளில் அதிக உடல் வளர்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளது.
இங்கு உடல் வளர்ச்சி என்பது உடலின் நீளத்தை அல்லது உயரத்தைக் குறிக்கின்றது. 12 நாட்களான 23 குழந்தைகள் தெரிவு செய்யப்பட்டு அவற்றின் உறக்க நேரம், மேலதிக உறக்கம் என்பன அவர்களின் பெற்றோரால் பதிவு செய்யப்பட்டு 17 மாதங்கள் அவற்றின் வளர்ச்சி வேகம் பதிவு செய்யப்பட்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது.குழந்தைகள் ஆழமாக உறங்குகின்ற போதும், ஓரளவு கண் அயருகின்ற போதும் உடல் வளர்ச்சிக்குக் காரணமான ஹோர்மோன்கள் அதிகம் செயற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF