புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு.
இண்டெர் நெட் பற்றி தெரியுமா உங்களுக்கு ?
இண்டெர் நெட் என்பது உலகத்தில் உள்ள செய்திகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக ஒன்று சேர்த்து கம்ப்யூட்டரின் மூலமாக உடனுக்குடன் உங்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு புதிய தொழில்நுட்பமாகும். அதோடு மட்டுமலாமல் பெரிய பெரிய நிறுவணங்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவும் தங்களுடைய நிறுவணத்தின் செயல்திட்டங்களையும் புதிய கண்டுபிடிப்புகளையும் உடனுக்குடன் தெரியப்படுத்துவதற்க்கு இந்த இணைய தளம் உதவியாக இருக்கிறது. மேலும் கம்ப்யூட்டரில் பயன்படுத்த்தப்படும் புதிய மென்பொருட்களின் (Softwares-சாப்ட்வேர்) கண்டுபிடிப்பு இந்த இணைய தளத்தின் மூலம்தான் தெரியப்படுத்தப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் இன்றைய நவீன யுகத்தில் நீங்கள் உங்களுக்கு விருப்பமானவர்களோடு ஆடியோ மற்றும் வீடியோ மூலம் பேசிக்கொள்ளவும் (சாட்டிங்) உடனுக்குடன் செய்திகளை பரிமாறிக்கொள்ளவும் கம்ப்யூட்டர் மூலமாகவே உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாழ்த்துக்கள் அனுப்புவதற்க்காகவும் இண்டெர் நெட் பயன்படுகிறது.
நீங்கள் மேலே உள்ள படத்தில் பார்க்கும் ஐக்கான் தான் இண்டெர் நெட்டை ஓப்பன் செய்வதற்க்கு பயன்படுகிறது. அதனை டபுள் கிளிக் செய்து (அல்லது அந்த ஐக்கானில் உங்கள் மவுசை வைத்து அதன் வலது புறம் கிளிக் செய்து ஓப்பன் என்று வருவதை கிளிக் செய்யவும்) இண்டெர்நெட்டை ஓப்பன் செய்ததும் கீழே படத்தில் உள்ளது போன்ற ஒரு தட்டு திறந்துகொள்ளும். இதில் தான் நீங்கள் உங்களுக்கு தேவையான செய்திகளை பார்க்க முடியும்.
இந்த படத்தில் நம்பர் 1 என்று குறியிட்டு காட்டப்பட்டுள்ள இடத்தில் தான் நீங்கள் பார்க்க விரும்பும் இணைய தள முகவரியை டைப் செய்யவேண்டும்.
ஒட்டு மொத்த தகவலும் இங்கு பார்க்க முடியும் என்றாலும் ஓவ்வொரு தகவலுக்கும் தனித்தனியே ஒரு முகவரி இருந்தால் தானே அது சாத்தியமாகும். அதனால் தான் ஒவ்வொரு தகவல் நிறுவணமும் தனித்தனியே தங்களுக்கென ஒரு பெயரை வைத்துள்ளது.
உதாரணத்திற்க்கு நீங்கள் நமது இணைய தளத்தை பார்க்கவேண்டும் என்றால் http://wwwnathiyalai.blogspot.com/என்று நீங்கள் டைப் செய்யவேண்டும்.
இப்படி டைப் செய்து உடனே உங்கள் கீ போர்டில் எண்டர் பட்டனை அழுத்தினால் உங்களுக்கு இணைய தளம் ஓப்பன் ஆகிவிடும். அதன் பிறகு நீங்கள் மேற்கொண்டு அந்த தளத்தில் தேவைப்பட்ட இடத்தை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.
இந்த தளத்தின் முகவரிய டைப் செய்ய்ம்போது நீங்கள் wwwnathiyalai.blogspot.com என்று மட்டும் டைப் செய்தாலே போதுமானது http:// என்று ஆரம்பத்தில் வரக்கூடியது தானாகவே நீங்கள் டைப் செய்யும் முகவரியோடு சேர்ந்துகொள்ளும்.
மேலும் இந்த முகவரி சம்பந்தமாக தெரிந்துகொள்ளவேண்டிய சில விபரங்கள்:
1) இந்த இணைய தள முகவரிகள் அனைத்தும் சிறிய ஆங்கில எழுத்துக்களாக ( Small Letter)மட்டுமே இருக்கும் பெரிய ஆங்கில எழுத்துக்கள் (CAPITAL LETTER இந்த முகவரியில் வரவே வராது (உதாரணத்திற்க்கு மேலே உள்ள முகவரி WWWNATHIYALAI.BLOGSPOT.COM என்று வராது)
2) இணைய தள முகவரியை நீங்கள் டைப் செய்யும்போது ஒரு வார்த்தைக்கு இன்னொரு வார்த்தை எக்காரணத்தைக்கொண்டும் இடைவெளியை விடக்கூடாது. சேர்த்துதான் டைப் செய்யவேண்டும். ( உதாரணத்திற்க்கு nathiyalaiஎன்பதை nathi yalai என்று டைப் செய்யக்கூடாது)
3) எந்த முகவரியாக இருந்தாலும் அதன் கடைசியில் .com .in .lk.ae .net என்பதுபோன்ற ஒரு முடிவு வார்தையோடு தான் இருக்கும். இது இல்லாமல் இருக்காது.
அடுத்து நம்பர் 2 என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தில் இருக்கும் ஆரோவை நீங்கள் எதற்க்காக பயன்படுத்தவேண்டும் தெரியுமா ?
இண்டெர் நெட்டில் ஒரு பக்கத்தை ஓப்பன் செய்த பிறகு இன்னொரு
பக்கத்தை ஓப்பன் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் பிறகு மறுபடியும் முதல் பக்கத்திற்க்கு போகவேண்டுமென்றால் அந்த ஆரோ பட்டனை கிளிக் செய்தால் போதும் முதல் பக்கத்திற்க்கு போய்விடலாம்.அடுத்து நம்பர் 3 என்று குறிப்பிடப்பட்டிருக்கு இடத்தில் என்ன பயன் தெரியுமா?
நீங்கள் இண்டெர்நெட்டில் அட்ரஸ் அடிக்கு இடத்தில் (நம்பர் 1 என்று குறிப்பிட்ட இடத்தில்) www.google.com என்று டைப் செய்து அந்த கூகுல் பக்கத்தை ஓப்பன் செய்தீர்கள் என்றால் உங்களுக்கு மேலே 3 என்று குறிப்பிட்ட பகுதி தெரியும் அந்த பகுதியில் நீங்கள் எந்த வார்த்தையை டைப் செய்கிறீர்களோ உடனே உங்களுக்கு அந்த வார்த்தைக்கு சம்பந்தமான பல இணைய தளங்கள் ஓப்பன் ஆகும். அதில் உங்களுக்கு எந்த இணைய தளம் தேவையோ அதை நீங்கள் ஓப்பன் செய்துகொள்ளலாம்.
உதாரணத்திற்க்கு நம்பர் 3 என்று குறிப்பிட்ட இதத்தில் நீங்கள் tamil cinema என்று டைப் செய்து உங்கள் கீ போர்டில் எண்டர் பட்டனை அழுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் உடனே உங்களுக்கு தமிழ் சினிமா சம்பந்தமாக இண்டெர்நெட்டில் எந்தனை விதமான இனைய தளங்கள் இருக்கின்றனவோ அவை அனைத்தும் ஓப்பன் ஆகும். அதில் உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை நீங்கள் கிளிக் செய்து ஓப்பன் செய்துகொள்ளலாம்.
அடுத்து நம்பர் 4 என்று குறிப்பிட்ட இடத்தில் ஒரு ஸ்டார் இருப்பதை நீங்கள் பார்ப்பீகள் இந்த ஸ்டாரை கிளிக் செய்தால் நீங்கள் ஏற்கனவே சேமித்து வைத்த உங்களுக்கு விருப்பமான் தளத்திற்க்கு உடனே செல்ல முடியும்.அடுத்து நம்பர் 5 என்று குடிப்பிட்ட இடத்தில் Tools என்று எழுதப்பட்டிருப்ப்பதை கிளிக் செய்தால் நீங்கள் இந்த இண்டெர் நெட் சம்பந்தமான சில செட்டப்புக்களை மாற்ற முடியும்.