Tuesday, May 24, 2011

பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்.


பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்ப முடியும் என லண்டன் பல்கலைக்கழக ஆய்வாளர் ரயோட்டா கானி தெரிவித்துள்ளார்.பெரிய மூளை என இங்கு குறிப்பிடுவது சாம்பனிறப்பகுதிகள் அதிகமாக காணப்படும் மூளையை ஆகும். நினைவாற்றல், பார்வை போன்ற வற்றை நிர்ணயிக்கும் மூளையின் சம்பனிறப்பகுதிகள் அதிகமாகக் காணப்படுவோரின் கவனத்தை இலகுவில் திசை திருப்ப முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
தனிப்பட்ட நபர்களின் கவத்தை திசை திருப்பக் கூடிய தன்மையின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மூளையின் சாம்பனிறப்பொருள் அதிகமாகக் காணப்படுவோரின் கவனம் ஏற்கனவே திசை திருப்பப்பட்டிருக்கும். வீதிச் சமிக்ஞைகளை கவனத்திற்கொள்ளாமை முதல் பல்பொருள் அங்காடிக்குச் சென்று என்ன கொள்வனவு செய்ய வேண்டுமென்பதனை மறத்தல் வரையிலான சில காரணிகளின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
தனிப்பட்ட நபர்களிடம் வினாக் கொத்துக்களை சமர்ப்பிப்பதன் மூலம் தரவுகள் திரட்டப்பட்டுள்ளன. மிகவும் எளிதில் கவனத்தை திசை திருப்பக் கூடிய நபர்களுக்கு கூடுதல் புள்ளிகள் வழங்கப்பட்டன. எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்களின் மூலம் நபர்களின் மூளையின் அளவும் சாம்பனிறப்பகுதியின் அளவும் பதிவு செய்யப்பட்டது. மூளையில் சாம்னிறப்பகுதி குறைவாகக் காணப்படுவோரை எளிதில் திசைதிருப்பி விட முடியாது என கண்டறியப்பட்டுள்ளது.
மூளைச் சோர்வடைதல்: மூளையின் இடது சுவர் மடலுக்கும் கவனம் திசைதிருப்பப்படலுக்கும் இடையிலான தொடர்பினை அறிந்து கொள்வதற்காக காந்தப்புல தூண்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி மூளையின் செயற்பாட்டை அரைமணித்தியாலத்திற்கு சோர்வடையச் செய்யும்.
15 தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கவனத்தை திசை திருப்பியும், திசை திருப்பாமலும் கேள்விகள் எழுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன. கவனம் திசை திருப்பப்பட்ட நபர் பதிலளிப்பதற்காக எடுத்துக்கொள்ளும் காலத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.மூளையின் இடது சுவர் மடலுக்கு காந்தப்புல தூண்டல் ஏற்படுத்தப்பட்டு ஆய்வு செய்த போது செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டனர். இதன் மூலம் மூளையின் இடது சுவர் மடலுக்கும் கவனத்திற்கும் தொடர்பு காணப்படுகின்றது.
விருத்தியடையாத மூளை: இரண்டு விதமான ஆய்வுகளின் இடது மூளையின் சுவர் மடலுக்கும் கவனத் திசை திருப்பலுக்கும் இடையில் நேரடித் தொடர்பு காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இடது மூளையின் சுவர் மடல் அதிகமாகக் காணப்படும் நபர்களை இலகுவில் திசை திருப்ப முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
மூளையின் சுவர் மடலுக்கும் கவனத்திற்கு என்னவிதமான தொடர்பு காணப்படுகின்றது என்பது புலனாகாத போதிலும் செயற்பாட்டிற்கும் சுவர் மடலின் அளவிற்கும் தொடர்பு இருக்கின்றது. வளர்ச்சியடையாத மூளையில் சாம்பனிறப்பொருள் அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த கோட்பாட்டின் மூலம் வளர்ந்தவர்களை விடவும் இளையவர்களை இலகுவில் திசை திருப்ப முடியும் என ஆய்வாளர்கள் குறிப்பிடப்படுகிறது.காந்தப்புல தூண்டல் தொழில்நுட்பத்தை காத்திரமான முறையில் பயன்படுத்த முடியுமாயின் எதிர்காலத்தில் மூளையின் செயற்பாட்டுத் திறனை விருத்தி செய்ய வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF