Tuesday, May 3, 2011

ஒஸாமா பின் லேடனின் வாழ்க்கை குறிப்புக்கள்.


அல் கய்தா இயக்கத் தலைவர் ஒஸாமா பின் லேடனின் கடந்த காலம் தொடர்பிலான ஓர் பார்வை. தாக்குதல்கள் மற்றும் ஒஸாமா தொடர்பான தகவல்களின் தொகுப்பாக இந்தப்பகுதி அமைகிறது.

1957 ஒஸாமா பின் மொஹமட் பின் அவாட் பின் லேடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் பிறந்தார். சிரியாவைச் சேர்ந்த ஹமீடா அல் அட்டாஸ் என்பவரே ஒஸாமாவின் தயாவார்.மொஹமட் பின் அவாட் என்பவரின் 54 பிள்ளைகளில் 17 பிள்யையாக ஒஸாமா பிறந்தார்.

யேமனிய பிரஜையான ஒஸாமாவின் தந்தை அவாட் பின் லேடன், சவூதி அரேபியாவின் கட்டிட நிர்மாண கோடீஸ்வர வர்த்தகர்களில் ஒருவராக திகழ்ந்தார்.
1979 பின் லேடன், ஜித்தாவில் உள்ள கிங் அசீஸ் பல்கலைக்கழகத்தில் பொதுநிர்வாகம் மற்றும் பொருளியல்துறை பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தார்.

ஜிஹாத் அமைப்பில் இணைந்து கொள்வதற்காக அல்லது சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான புனிதப் போரில் பங்கெடுப்பதற்காக ஒஸாமா ஆப்கானிஸ்தானுக்குச் சென்hறார்.

ஒஸாமா பின் லேடன் ஆப்கானிஸ்தானில் ஒரு தாசப்த காலமாக தங்கியிருந்தார்.

சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் கெரில்லாக்களுக்கு குடும்ப வர்த்தகமான கட்டி நிர்மாணத்துறையின் ஊடாக ஒஸாமா உதவிகளை வழங்கினார்.

சுரங்கங்களை அமைத்தல், கெரில்லாப் போராளிகளுக்கு தங்குமிட வசதகிளை ஏற்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கியதுடன், சில சந்தர்ப்பங்களில் போராட்டங்களிலும் ஈடுபட்டார்.

1980-1989 ஆப்கானிஸ்தானின் முஜாஹ_தீன் கெரில்லாக்களுக்காக நிதி திரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

உபகரண மற்றும் மனிதாபிமான உதவிகளையும் வழங்கினார். இந்தக் காலப்பகுதியில் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த சோவியத் ஒன்றிய படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் தனிப்பட்ட ரீதியிலான பங்களிப்பினை வழங்கினார்.

1988 அல் கய்தா இயக்கத்தை நிறுவி அதற்கு நிதி உதவிகளை வழங்கினார். அல் கய்தா என்ற சொல்லுக்கு அராபிய மொழியில் “அடித்தளம்”என்று பொருள்.
1989 சோவியத் ஒன்றிய படையினர் ஆப்கானிஸ்தானிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டனர். குடும்ப நிறுவனமாக பின் லேடன் குழும நிறுவனத்தில் பணியாற்றும் நோக்கில் பின் லேடன் சவூதி அரேபியாவிற்கு திரும்பினார்.

1990 ஆகஸ்ட் 7 குவைட்டின் மீது ஈராக்கிய படையினர் தாக்குதல் நடத்தியதனைத் தொடர்ந்து, சதாம் ஹ_செய்னின் ஈராக்கிய படையினர் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் அமெரிக்க துருப்பினர் சவூதி அரேபியாவில் நிலைநிறுத்தப்பட்டனர்.

முஸ்லிம்களின் புனித தளமான மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு அருகாமையில் அமெரிக்க துருப்பினர் நிலை கொண்டிருப்பதற்கு பின் லேடன் கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

1991 சவூதி அரேபிய அரசாங்கம் பின் லேடனை நாடு கடத்தியது. பின் லேடனும் அவரது ஆதரவாளர்களும் சூடானுக்குச் சென்றனர்.

சூடானை மையமாகக் கொண்டு அல் கய்தா பயங்கரவாத வலையமைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தது.

1992 மனிதாபிமான பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் அமெரிக்கப் படையினர் சோமாலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சோமாலியாவில் இயங்கி வந்த ஆயுதக் குழுக்களை கட்டுப்படுத்தும் முக்கிய பொறுப்பு அமெரிக்க துருப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அமெரிக்க படையினருடன் போராடுவதற்காக, சோமாலிய ஆயுதக் குழுக்களுக்கு ஒஸாமா பயிற்சி வழங்கியதுடன், தனது ஆதரவாளர்களையும் அனுப்பி வைத்தார்.

1993 பெப்ரவரி 23 நியூ யோர்க் நகரில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக் கணக்கானவர்கள் காயமடைந்தனர். பின் லேடனுடன் தொடர்புடைய ஆறு பேர் இந்த சம்பவத்தில் குற்றவாளிகாக அறிவிக்கப்பட்டனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளின் பட்டியலில் பின் லேடனின் பெயரும் இணைக்கப்பட்டிருந்தது.

1993 ஒக்ரோபர் சோமாலியாவின் மொகடெசு நகரில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 18 அமெரிக்கத் துருப்பினர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுடன் அரேபிய மற்றும் ஆப்கானிஸ்தானியர்களுக்கு தொடர்பு இருப்பதாக பின் லேடன் அறிவித்திருந்தார்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கப் படையினர் சோமாலியாவிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டனர். அமெரிக்க துருப்பினர் பேப்பர் புலிகள் என ஒஸாமா விமர்சனம் செய்திருந்தார்.

1994 சவூதி அரேபிய அரசாங்கம் ஒஸாமா பின் லேடனின் குடியுரிமையை உத்தியோகபூர்வமாக ரத்து செய்தது.

அவருக்குச் சொந்தமான சகல சொத்துக்களும் முடக்கப்பட்டதுடன் உறவினர்களும் ஒஸாமாவுடனான உறவுளை முறித்துக் கொண்டனர்.

குறிப்பிட்ட அதே வருடத்தில் பின் லேடனை படுகொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது, இந்தத் தாக்குதல் முயற்சியைத் தொடர்ந்து தனது தனிப்பட்ட பாதுகாப்பை பின் லேடன் அதிகரித்துக்கொண்டார்.

எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கை படுகொலை செய்ய முயற்சித்தமை.

1995 பாகிஸ்தானில் அமைந்துள்ள எகிப்து தூதரகத்தின் குண்டுத் தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களுடன் ஒஸாமாவிற்கு தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

பின் லேடனுக்கும் ஏனைய தீவிரவாத அமைப்புக்களுக்கும் இடையில் தொடர்பு காணப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

குறிப்பாக எகிப்து ஜிஹாத் அமைப்புடன் பின் லேடன் தொடர்புகளை பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

1995 ரியாத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து அமெரிக்கர்களும் இரண்டு இந்தியர்களும் கொல்லப்பட்டனர்.

1996 சூடான் அரசாங்கம் பின் லேடனை நாடு கடத்தியது.

மூன்று மனைவிகள் மற்றும் பிள்ளைகளுடன் பின் லேடன் ஆப்கானிஸ்தானுக்கு சென்றார்.

தலிபான் அடிப்படைவாத அமைப்பினர் பின்லேடனுக்கு ஆதரவளித்தனர்.

அதே ஆண்டில், சோமாலியாவில் 18 அமெரிக்கத் துருப்பினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் பின் லேடனுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சுமத்தினர்.

1996 ஜூன் 25 சவூதி அரேபியாவின் கோபாரில் இடம்பெற்ற தாக்குதலில் 19 அமெரிக்கப்படையினர் கொல்லப்பட்டனர்.

1993 ஆகஸ்ட் 23 பின் லேடன், அமெரிக்காவிற்கு எதிரான புனிதப் போரை பகிரங்கப்படுத்தினார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து ஜிஹாத் போர்ப் பிரகடனத்தை மேற்கொண்டார்.
அரேபிய நிலங்களில் அமெரிக்கர்கள் நிலைகொண்டிருப்பதனை எதிர்க்கும் வகையில் இந்தப் போர்ப் பிரகடனம் அறிவிக்கப்பட்டிருந்தது.

1997 மேற்குலக ஊடகங்களுடனான முதலாவது நேர்காணல், அமெரிக்கா நீதியற்ற வகையியல் செயற்பட்டு வருதாக சீ.என்.என். ஊடகத்திடம் தெரிவித்திருந்தார்.

எமது வளங்களைப் பயன்படுத்தி எம்மை ஆள அமெரிக்க முயற்சிக்கின்றது அதற்கு எதிர்ப்பை வெளியிடுவோர் பயங்கரவாதிகளாக கருதப்படுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

1993ம் ஆண்டு அரேபிய புனித பேராளிகள் சோமாலியாவில் நிலைகொண்டிருந்த அமெரிக்கத் துருப்பினர் மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்தார்.

1997 கிழக்கு ஆபிரிக்க பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை உக்கிரப்படுத்துமாறு பின் லேடன் உத்தரவிட்டுள்ளார். இதன் ஓர் கட்டமாக கென்யா மற்றும் தன்சானியாவில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

1998 பின் லேடனின் அல் கய்தா அமைப்பினரும், ஹய்மான் அல் சார்வாரியின் எகிப்து ஜிஹாத் அமைப்பினரும் ஒன்றிணைந்து கொண்டதாக அமெரிக்கா அறிவித்தது.

1998 பெப்ரவரி மாதம் குறித்த இரண்டு அமைப்புக்களினதும் தலைவர்கள் அமெரிக்க சிவிலியன்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கொலை செய்ய வேண்டுமென ஜிஹாத் போராளிகளுக்கு உத்தரவிட்டனர்.

1998 மே 7 அமெரிக்க துரப்பினர் முஸ்லிம்களின் எதிரிகள் என பின் லேடனின் நெருங்கிய சகா மொஹமட் அடாப் அறிவித்திருந்தார்.

பின் லேடனின் பட்வா கோட்பாடுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த ஏனைய தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

1998 மே 29 இஸ்லாமியர்களின் அணு குண்டு” என்ற தலைப்பில் பின் லேடன் பிரகடனம் ஒன்றை வெளியிட்டார். இறைவனுக்கு எதிராக செயற்படுவோரை வீழ்த்த வேண்டுமென வலியுறுத்திருந்தார்.

1998 ஆகஸ்ட் 7 தன்சானியா மற்றும் கென்யாவில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகங்களின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் 224 பேர் கொல்லப்பட்டனர்.

1998 நவம்பர் தன்சானிய மற்றும் கென்ய தூதரக குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் 224 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஒஸாமாவிற்கு எதிராக அமெரிக்க வழக்குத் தொடர்ந்தது.

1999 ஜூன் 7 அமெரிக்காவின் எப்.பி.ஐ. புலனாய்வுப் பிரிவின் மிகவும் தேடப்பட்டு வருவோர் பட்டியலின் முதல் பத்து இடங்களில் பின் லேடனின் பெயர் இணைக்கப்பட்டது.

2000 மே �பின் லேடனுக்கு ஆதரவான முஸ்லிம் கெரில்லாக்கள் மலேசியாவில் 21 சுற்றுலாப் பயணிகளை பணமாக பிடித்தனர்.

2000 ஒக்ரோபர் 12 யேமனில் அமெரிக்கப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் 17 படையினர் கொல்லப்பட்டதுடன், 37 பேர் காயமடைந்தனர். தாக்குதல் சம்பவத்துடன் ஒஸாமா பின் லேடனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது.

2000 லொஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சி தோல்வியடைந்தது, இந்த தாக்குதல் முயற்சியுடன் தமக்கு தொடர்பு இருப்பதாக அல்ஜீரியர் ஒப்புக் கொண்டார்.

பின் லேடனினால் ஆப்கானிஸ்தானில் வைத்து தமக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

2001 மே 29 1998ம் ஆண்டு ஆபிரிக்காவில் அமெரிக்கத் தூதரகங்களின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் நான்கு பின் லேடன் ஆதரவாளர்களுக்கு அமெரிக்கா தண்டனை விதித்தது.

2001 ஆகஸ்ட் 14 செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு முன்னர் பின் லேடன் அல் ராய் அல் அமான் பத்திரிகைக்கு விசேட நேர்காணல் ஒன்றை அளித்தார்.

2001 செப்டம்பர் 11 நான்கு அமெரிக்க வர்த்தக விமானங்கள் கடத்தப்பட்டு, நியூயோர்க், வொஷிங்டன் மற்றும் பின்சில்வேனியா ஆகிய பிரதேசங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதல்களில் 3000 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயடைந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் பின் லேடனுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக அமெரிக்கா அறிவித்தது.

2001 நவம்பர் மாதம் பின் லேடனின் தலைக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்குவதாகத் தெரிவித்து அமெரிக்கத் துருப்பினர் ஆப்கானிஸ்தானில் துண்டுப் பிரசூரங்களை வெளியிட்டனர்.
2001 டிசம்பர் நவம்பர் 27ம் திகதி டோரா போரா மலைப்பகுதியில் பின் லேடனைக் கண்டதாக சிரேஸ்ட அதிகாரியொருவர் அறிவித்தார்.

அமெரிக்க, பிரிட்டிஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் துருப்பினரும் இணைந்து பாரிய தாக்குதல்களை நடத்தினர்.

2001 டிசம்பர் 27 பின் லேடன் குவேடா ஆதரவாளர்களுடன் பாகிஸ்தானில் தங்கியிருப்பதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் அறிவித்தனர்.

2002 ஜனவரி 18 அல் கய்தா தலைவர் பின் லேடன் சிறுநீரகம் செயழிழந்தமையினால் ஆப்கானிஸ்தானில் உயிரிழந்திருக்கக் கூடுமென பாகிஸ்தானி;ன் அப்போதைய ஜனாதிபதி பேர்விஸ் முஷாரப் தெரிவித்தார்.

2002 பெப்ரவரி 15 அமெரிக்கத் துருப்பினர் ஒஸாமாவின் நிலை மீது தாக்குதல் நடத்தியதாகவும் இந்தத் தாக்குதலிலிருந்து தப்பித்துக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

பாகிஸ்தான் � ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் பின் லேடன் மறைந்திருப்பதற்கான ஆதராங்களை திரட்டுவதில் சிக்கல் நிலைமை காணப்பட்டது.

2002 மார்ச் 9 ஒஸாமாவின் மரணத்தை மறைக்க முடியாது என அவரது மனைவியொருவர் தெரிவித்ததாக சவூதி அரேபிய ஊடகம் செய்தி வெளியிட்டது.

ஒஸாமா மரணித்தல் உலகம் முழுவதிலும் அந்த செய்தி பரவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

2002 மே 17 ஒஸாமா பின் லேடன் உயிர் வாழ்வதாக தலிபான் தலைவர் முல்லா ஓமர் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டார்.

இந்த தகவலினால் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஆத்திரமடைந்தார்.

2002 ஜூன் 12 ஒஸாமா பின் லேடன் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக தலபான் இயக்கத் தலைவர் முல்லா ஓமார் ரஸ்ய பத்திரிகை ஒன்றுக்கு தகவல் வெளியிட்டிருந்தார்.

ரஸ்யாவிற்கு எதிரான போராட்டத்தின் போது ஒஸாமா உதவிகளை வழங்கியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

புனிதப் போரின் ஆரம்பமே இது எனவும், அமெரிக்கர்களுக்கு எதிராக கடுயைமான போராட்டம் எதிர்காலத்தில் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பட்டிருந்தார்.

2002 ஜூலை டிசம்பர் மாதம் இடம்பெற்ற தாக்குதலில் பின் லேடன் காயமடைந்தாகவும், தற்போது உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் லண்டனை மையமாகக் கொண்டு பிரசூரமாகும் அல் குட்ஸ் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

அமெரிக்காவிற்கு எதிராக மற்றுமோரு தாக்குதல் நடத்தப்படும் வரையில் ஒஸாமா வீடியோ காட்சிகளில் தோன்ற மாட்டார் என அவரது ஆதரவாளர்கள் தமக்கு தெரிவித்ததாக அல் குட்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் அப்துல் பாரி அட்வான் குறிப்பிட்டிருந்தார்.

2005 மார்ச் 10 ஒஸாமா பின் லேடனுக்கு எதிராக ஸ்பெய்ன் இஸ்லாமிய தலைவர்கள் கருத்துக்களை வெளியிட்டனர். ஒஸாமாவை எவரும் பின்பற்றக்கூடாது என வலியுறுத்தப்பட்டிருந்தது.

2009 ஒக்ரோபர் ஒஸாமாவின் வளர்ச்சி என்ற தலைப்பில் புத்தகமொன்று வெளியிடப்பட்டது. பின் லேடனின் மனைவியும் மகனும் இந்தப் புத்தகத்தை எழுதியிருந்தனர்.

2009 டிசம்பர் பின் லேடன் ஆப்கானிஸ்தானிலா அல்லது பாகிஸ்தானிலா இருக்கின்றார் என்பதற்கு போதியளவு புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என அமெரிக்கா அறிவித்தது.

2010 ஜனவரி 29 பின் லேடன் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் இரண்டு ஒலி நாடாக்களை வெளியிட்டிருந்தார். நெதர்லாந்தில் நடத்துவதற்கு முயற்சிக்கப்பட்ட தாக்குதல் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைக்கு ஐக்கிய நாடுகள் அபை;பு உள்ளிட்ட அமைப்புக்கள் உரிய தீர்வினை வழங்குவதில்லை என இரண்டாவது ஒலி நாடாவில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அல் ஜசீரா தகவல் வெளியிட்டிருந்தது.

2010 மார்ச் �9ஃ11 தாக்குதல்களைத் திட்டமிட்ட காலீட் சேக் முகஹமடிற்கு அமெரிக்க மரண தண்டனை விதித்திருக்கலாம் என பின் லேடன் ஒலி நாடாவில் தெரிவித்திருந்தார். 2010 ஒக்ரோபர் வெள்ளம், சுத்தமான நீரின்மை மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றினால் பாதிப்புக்களை எதிர்நோக்கி வரும் அப்பாவி முஸ்லிம்களுக்கு உதவிகளை வழங்குமாறு ஒஸாமா என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் ஒலி நாடா ஒன்றை வெளியிட்டிருந்தார்.

பின்லேடன் பாகிஸ்தானில் இருந்து கொண்டு தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா அறிவித்தது.

அதிகளவு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பின் லேடன் வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
பிரான்ஸ் தனது துருப்பினரை ஆப்கானிஸ்தானிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென பின் லேடன் ஒலி நாடா மூலம் கோரியிருந்தார். எங்களைக் கொன்றால் நாமும் உங்களைக் கொலை செய்வோம் என அவர் தெரிவித்திருந்தார்.

2010 ஆகஸ்ட் ஒஸாமாவின் இருப்பிடம் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா அறிவித்தார்.

2011 ஜனவரி ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுமாறு பின் லேடன் மீளவும் பிரெஞ்சு படையினருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

அமெரிக்காவுடன் கூட்டு சேர்வது ஆபத்துக்களை ஏற்படுத்தும் என அவர் பிரான்ஸிற்கு எச்சரிக்கை விடுத்தார்.

இதனிடையே, ஒஸாமா பின் லேடன் பாகிஸ்தானின் வீடொன்றில் தங்கியிருப்பதாக கண்டு பிடித்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா, ஒஸாமா பின் லேடன் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பான தேசிய பாதுகாப்புப் பேரவை கூட்டங்களில் கலந்து கொண்டார்.

ஒஸாமாவின் இருப்பிடம் தொடர்பில் உறுதியான தகவல்கள் வெளிவரத் தொடங்கின.


2011 ஏப்ரல் 29 ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 28ம் திகதிகளில் தேசியப் பாதுகாப்புப் பேரவையுடனான கூட்டத்தின் போது தாக்குதலை நடாத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி அதிகாரம் வழங்கினார்.


2011 மே � அமெரிக்கப் படைப் பிரிவைச் சேர்ந்த சிறிய குழுவொன்றும், பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவினரும் பாகிஸ்தானின் அபோட்டாபாட் பகுதியில் பின் லேடனின் இருப்பிடம் மீது நாற்பது நிமிட தாக்குதல் நடத்தினர். 


ஹெலிகொப்டர்களின் மூலம் அமெரிக்கத் துருப்பினர் நடத்திய தாக்குதலில் பின் லேடன் கொல்லப்பட்டதுடன், அமெரிக்கத் துருப்பினருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஒஸாமாவின் சடலத்தை அமெரிக்கத் துருப்பினர் கைப்பற்றினர்.



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF