Wednesday, December 22, 2010

இஸ்ரேலுடன் இலங்கை தொடர்பு! இஸ்லாமிய, அரபு நாடுகள் சீற்றம்



தற்போதைய இலங்கை அரசாங்கம் இஸ்ரேலுடன் வைத்துள்ள நெருங்கிய தொடர்புகள் குறித்துச் சந்தேகங்களை வெளியிட்டுள்ள அரபு மற்றும் இஸலாமிய நாடுகள் தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளதாகத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் பலஸ்தீன் மக்கள் தொடர்பில் தற்போது நடந்து கொள்ளும் முறையில் தொடர்பிலும் இந்த நாடுகள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளன.

சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையைச் சேர்ந்த 300 பேரை இஸரேலுக்குத் தொழிலுக்கு அனுப்பியமை குறித்தும் அவை தமது கவலை வெளியிட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF