Monday, December 6, 2010

நீருக்கடியில் சுவாசிக்க புதிய நீச்சல் உடை : அமெரிக்காவில் கண்டுபிடிப்பு


ஆழ்கடல் செல்லும், "ஸ்கூபா டைவிங்' வீரர்களும், மீன்களைப் போல் சுவாசிக்கும் வகையில் புதிய நீச்சல் உடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆழ்கடலில் உள்ள உயிரினங்கள் மற்றும் புதைபொருட்கள் பற்றி, "ஸ்கூபா' வீரர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். நீருக்கடியில் சுவாசிப்பதற்காக ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட உபகரணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதால் ஆய்வுப் பணிகளை முழுமனதாக நடத்த முடியாது. இதை கருத்தில் கொண்டு "ஸ்கூபா' வீரர்களும் நீருக்கடியில் சுவாசிக்கும் விதமாக புதிய நீச்சல் உடையை அமெரிக்காவைச் சேர்ந்த அர்னால்டு லான்ட் கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து அர்னால்டு லான்ட் கூறியதாவது:
ஆழ்கடல் செல்லும், "ஸ்கூபா' வீரர்கள் சுவாசிப்பதற்காக இந்த நீச்சல் உடை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக திரவ நிலையில் உள்ள சிறப்பு கரைசல் (பெர்ப்ளூரோ கார்பன்) பயன்படுகிறது. இந்த கரைசலில் பெருமளவு ஆக்சிஜன் கலந்திருக்கும். இதனை அணிந்துள்ள ஒருவரின் காது, மூக்கு மற்றும் நுரையீரல் பகுதிகளில் உள்ள ஆக்சிஜன் வெளியேறாமல் கட்டுப்படுத்தப்படும். சுவாசிக்கும் போது ஆக்சிஜன் நிரம்பிய குமிழ்கள் திரவ நிலையில், மூக்கு வழியாக சென்று அவரது நுரையீரல் பகுதியை அடைகிறது. நுரையீரல் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு மூக்கு வழியாக வெளியேறாமல் ரத்தத்தில் கலந்து கால்களில் உள்ள "பெமோரல்' நரம்புகளை வேகமாக இயக்க உதவும். சாதாரண காற்றை சுவாசிப்பது போன்ற உணர்வுதான் நமக்கு ஏற்படும். இவ்வாறு அர்னால்டு லான்ட் கூறினார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF