
உலகின் முதலாவது டுவல்-கோர் (Dual-core) புரசெஸரைக் கொண்ட அதிவேக கையடக்கத்தொலைபேசியினை எல்.ஜி தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.இது ஒப்டிமஸ் எக்ஸ் 2 (Optimus X2) எனப்பெயரிடப்பட்டுள்ளது.
சந்தையிலுள்ள மற்றைய ஸ்மார்ட் போன்களை விட இது வேகமானதென எல்.ஜி உத்தரவாதமளித்துள்ளது.
இதில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அண்ட்ரோயிட் புரோயோ 2.2 இயக்குதளத்தின் மூலம் இக் கையடக்கத் தொலைபேசிகள் இயங்கவுள்ளன. எனினும் பின்னர் ஜிஞ்ஜர் பிரட் 2.3 இற்கு மேம்படுத்திக்கொள்ளவும் முடியும்.
மற்றும் வேகமான இணையவசதி, 8 மெகா பிக்ஸல் கமெரா, வீடியோ அழைப்புக்களுக்கான 1.3 மெகாபிக்ஸல் முன் கெமாரா 32 ஜிபி வரை அதிகரிக்கக்கூடிய மெமரி, 8 ஜிபி உள்ளக மெமரி என்பனவற்றையும் இது கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியானது அடுத்தமாதம் கொரியாவில் விற்பனைக்குவரவுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF