இலங்கையைச் சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர்களினதும் மேலும் சில அமைச்சர்கயதும் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்துத் கருத்துத் தெரிவித்துள்ள சில அமைச்சர்கள் தற்போது, எமது தனிப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் ஒத்துக் கேட்கப்படுகின்றன.
இன்றைய அரசின் கீழ் எமக்கு அரசியல் செய்ய முடியாதுள்ளது. எமது தனிப்பட்ட அனைத்துத் தொலைபேசி உரையாடல்களும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. இவ்வாறான உரையாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அவற்றினை அவர் தினமும் கேட்டு வருகிறார்.
எனக் குற்றஞ்சாட்டியுள்ள இந்த அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டு அவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டிருந்ததனைத் தாம் அறிவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.