Saturday, December 25, 2010

நாய்களால் 1000 வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியும் ஆய்வில் தகவல்

வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளில் நாயும் ஒன்று. சில நாய்கள் எஜமானர்கள் இடும் கட்டளையை புரிந்து கொண்டு அதன்படி செயல்படுகின்றன. பொதுவாக நாய்கள் 1000-க்கும் மேற்பட்ட வார்த்தைகளை புரிந்து கொண்டு அதன்படி நடக்கும் தன்மை உடையவை என விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். 

லண்டனை சேர்ந்த மனோதத்துவ நிபுணர்கள் ஆலிஸ்டன் ரெய்டு, ஜான் பில்லி ஆகியோர் பார்டர் கர்லஸி என்ற இனத்தைச் சேர்ந்த ஷாசெர் வகை நாயிடம் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த நாய் 1022 பொம்மைகளின் பெயரை புரிந்து கொண்டது. பந்து மற்றும் பொம்மை வடிவிலான விலங்குகளின் பெயர்கள் போன்றவை இதில் அடங்கும். இந்த நாய் 3 வயதுடையது. மனோதத்துவ நிபுணர் பில்லிக்கு சொந்தமானது. 

அந்த நாயின் மனப்பாட திறனை அதிகரிக்க 838 தடவை பயிற்சி சோதனை நடத்தப்பட்டது. அதில் 20 வார்த்தைகளில் 18 வார்த் தைகளுக்கு அந்த நாய் சரியான முறையில் நடந்து கொண்டது. இதே சக்தி மற்ற நாய்களுக்கும் இருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF