வயர்கள் எதுவும் அற்ற முறையில் கையடக்கத் தொலைபேசிகளையும், ஏனைய உபகரணங்களையும் சார்ஜ் செய்யும் புரட்சிகரமான முறை வின்ட்ஸர் சர்வதேச விமான நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது விரைவில் உலகமயமாக்கப்படும் என்று இந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ள பல்தேசியக் கம்பனியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மிஸோரியை தளமாகக் கொண்டு செயற்படும் லெகட் அன்ட் பிளட் நிறுவனமே இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. Qi standard wireless station என்று இந்தப் புதிய தொழில்நுட்பம் அழைக்கப்டுகின்றது.
கையடக்கத் தொலைபேசிகளையும், பிளக்பெரி உபகரணங்களையும் வரையரையின்றி இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சார்ஜ் செய்துகொள்ளலாம். விமானங்களின் இருக்கைகள், சமையலறைகளின் மேல்தளம், கராஜ்ஜுகள், ரயில் மற்றும் பஸ் வண்டி நிலையங்கள் என பல இடங்களிலும் இதைப் பயன்படுத்தலாம்.
60க்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிச் சேவை வழங்குனர்கள் மற்றும் அது சம்பந்தமான உபகரணங்களின் விநியோகத்தர்கள் ஆகியோருடன் விரிவான முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தியே இந்த தொழில்நுட்ப முறை உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF