இலங்கையின் தேசிய கீதம், இனி சிங்கள மொழியில் மட்டுமே பாடப்பட வேண்டும். தமிழில் பாடும் முறை ரத்து செய்யப்படுகிறது' என நாட்டு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழில் இது நாள் வரை பாடப்பட்டு வந்தது. தற்போது அந்த முறையை விட்டு, சிங்கள மொழியில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்பட வேண்டும், என்று அதிபர் ராஜபக்ஷே உத்தரவிட்டுள்ளார்.
அவரது தலைமையில் கூடிய அமைச்சரவையில், இனி அரசு சார்ந்த அனைத்து துறைகளிலும் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று எடுக்கப்பட்டது. இம்முடிவு அனைத்து அமைச்சகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர்களிடம் பேசிய ராஜபக்ஷே "எந்த நாட்டிலும் ஒரு மொழிக்கு மேல் தேசிய கீதம் பாடப்படுவதில்லை.
இலங்கையின் வடபகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்போதைய பிரதமர் சிறீமாவோ பண்டார நாயக, தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட போது அதை எதிர்க்கும் விதமாக, அந்நிகழ்ச்சியில் இருந்து வெளிநடப்பு செய்தார். இலங்கை ஒரே நாடு என்ற ரீதியில் தான், நாம் சிந்திக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். ஆனால் அமைச்சரவையின் இம்முடிவுக்கு, அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்காரா மற்றும் ராஜித சேனாரத்னே இருவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.