
ஞாபகமறதி என்பது இன்று பலருக்கும் உள்ள பிரச்சினை. அவர்களுக்கு ஓர் ஆறுதல். ஞாபக சக்தியைச் செயற்கையாகக் கூட்டும் உத்தியை விஞ் ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதன்மூலம், தலைக்குள் நேரடியாக ஊடுருவாமலே ஞாபகசக்தியைத் தூண்டலாம் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
இதற்கு விஞ்ஞானிகள் பயன்படுத்தும் தொழில்ட்பத் தின் பெயர், `டிரான்ஸ்கிரேனியல் டைரக்ட் கரன்ட் ஸ்டிமுலேஷன்’. அதாவது, `எலக்ட்ரோடுகளை’ பயன்படுத்தி, மயிர்க்கால்களில் மிகக் குறைந்த அளவு மின்சாரத்தைச் செலுத்துவது. இதன் மூலம், மூளையின் ஒரு பகுதியின் செயல் பாட்டை தற்காலிகமாக கூட்டவோ, குறைக்கவோ முடியும்.
இது தொடர்பான ஞாபகசக்தி பரிசோதனை யில், மேற்கண்ட மின்தூண்டலுக்கு உள்ளானவர்கள், மற்றவர்களைவிட இரு மடங்கு `ஸ்கோர்’ பெற்றனர். பார்வையால் காண்பவற்றை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்வதில் 110 சதவீத முன்னேற்றம் காணப்பட்டது.