Wednesday, December 15, 2010

சனி கிரகத்தின் நிலவில் பனிக்கட்டி எரிமலை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு



அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் சனி கிரகத்தில் ஆய்வு நடத்த காசினி என்ற செயற்கை கோளை செலுத்தியுள்ளது. அதற்கு காசினி-ஹைஜன் மிஷன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த காசினி செயற்கை கோள் சனி கிரகத்தின் அமைப்புகளை புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறது. அதில் சனி கிரகத்தின் மிகப் பெரிய நிலவான டைடனில் 1,500 மீட்டர் உயர மலை இருப்பது தெரிய வந்தது.

“டைடன்” நிலவின் வெளிப்புறம் ஐஸ் கட்டி யினால் ஆன தண்ணீர் மற்றும் அமோனியாவால் ஆனது. அவை மிகக் குறைந்த வெப்பநிலையிலேயே உருகக் கூடியது. அவ்வாறு உருகி டைடனின் வெளிப்புறத்தில் படர்ந்து நிற்கிறது. “டைடன்” நிலவில் உள்ள மலைகளின் இடையே தற்போது எரிமலையும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது டைடனில் தெற்கு பகுதியில் உள்ளது. மேலும், இது அங்குள்ள கடலில் மணற்குன்றுகளாக உள்ளன.

இவற்றை சொட்ராபாகுவா என்று அழைக்கின்றனர். டைடன் நிலவு பனிக் கட்டியால் சூழப்பட்டிருப்பதால் இந்த எரிமலையும் பனிக்கட்டி மூடிக்கிடக்கிறது. இவை காசினி செயற்கை கோளின் “3டி” காமிரா மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை புவியியல் விஞ்ஞானிகள் மாநாட்டில் பேராசிரியர் டாக்டர் கிர்க் தெரிவித்தார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF