Tuesday, December 14, 2010

நாசா விற்பனை செய்த கம்ப்யூட்டர்களில் ரகசிய விவரங்கள்



அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விற்பனை செய்த கம்ப்யூட்டர்களில் ரகசிய விவரங்கள் அழிக்கப்படவில்லை. நாசாவிண்வெளி மையம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தங்கள் வசமிருந்த பழைய கம்ப்யூட்டர்களை விற்பனை செய்தது.
ஆனால் அதில் 2010-ம் ஆண்டில் ஸ்பேஸ் ஷட்டில் விண்வெளி ஓடம் குறித்து சேகரித்து வைக்கப்பட்டிருந்த டேட்டாக்கள் மற்றும் விண்வெளி ரகசியங்கள் குறித்த தகவல்களை முறையாக அழிக்காமல் விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் விற்பனை செய்யப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களில் நாசாவின் இன்டெர்நெட் புரோட்டோ கால் விலாசங்களும் அழிக்கப்படாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை கள் அனைத்தும் பயங்கரவாதிகள் கைகளில் கிடைத்தால் நாசாவின் இன்டர்னல் கம்ப்யூட்டர் நெட் ஒர்க்கில் புகுந்து சீர் கேட்டை விளைவிக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF