Sunday, December 19, 2010
இந்தோனேஷிய தீவில் வாழ்ந்த பெரிய பறவையினத்தின் படிவங்கள் கண்டுபிடிப்பு
இந்தோனேஷிய தீவுகளில் ஒன்று புளோரஸ். இங்கு மிகப்பெரிய மாரபவ் வகை நாரை இனம் ஒன்று வாழ்ந்ததற்கான அடையாளம் தற்போது தெரிய வந்துள்ளது. தொல்லியல் ஆய்வாளர்கள் அந்த பறவையின் படிவங்களை கண்டுபிடித்துள்ளனர். ஏறத்தாழ 1.8 மீ உயரமும், 16 கிலோ எடையும் கொண்டது இந்த பறவை. இதன் அறிவியல் பெயர் லெப்டப்டிலொஸ் ரொபஸ்டஸ். இந்த இடத்தில் தற்போதைய மனிதர்களை போன்ற தோற்றம் கொண்ட மிகச்சிறிய மனிதர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்கள் ஹோபிட்் என்றழைக்கப்படுகின்றனர். உருவத்தில் ஒப்பிடும் பொழுது அந்த பறவை ஹோபிட்் இனத்தை விட பெரியதாக இருந்துள்ளது. இந்த பறவையின் 4 கால் எலும்புகள் கொண்ட படிவங்கள் புளோரஸ் தீவின் லியங் புவா குகைகளில் கிடைத்துள்ளது. இந்த பறவை 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கக்கூடும் என கணக்கிட்டுள்ளனர். மேலும் இங்கு குள்ள யானைகள், பெரிய எலிகள், பெரிய வகை பல்லிகள் மற்றும் சிறிய இன மனிதர்கள் ஆகியோர் வாழ்ந்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF