Monday, December 27, 2010

கடும் உறைபனியில் 24 மணித்தியாலங்கள் தாக்குப்பிடித்து அவுஸ்திரேலியர் ஒருவர் சாதனை


அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கடும் உறைப்பனியில் 24 மணித்தியாலயங்கள் வரை இருந்து உயிர் சாதனைபடைத்துள்ளார்.
கிளோஸ் பொக்ஸ் என்பவரே இவ்வாறு உறைப்பனியிலிருந்து சாதனைபடைத்துள்ளார். இவருக்கு மிஸ்டர் பிரீஸ் என்ற பெயரும் உள்ளது.
அவுஸ்திரேலியாவிலுள்ள ஸ்பிட்டல் பனிப்பாறைக்கு மத்தியில் 2 மீற்றர் நீளமும் 70 சென்றிமீற்றர் அகலமும் உடைய பகுதியொன்றில் 20 மணித்தியாலங்கள் மட்டும் இவர் தங்கியிருந்தார். இதன்போது ஜீன்ஸ், ஜம்பர் மற்றும் பாதணிகள் ஆகியவற்றை மாத்திரமே அவர் அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாயாஜால வித்தைக்காரரான இவர் இதற்குமுன் 8 மணித்தியாலயங்கள் உறைபனியிலிருந்து சாதனை படைத்திருந்தார். இப்போது தனது சொந்த சாதனையை தானே முறியடித்துள்ளார்.
இவர் புதிய சாதனையை நிலைநாட்ட அப்பனிப்பாறைக்கு செல்லும்போது அவசர நிலைமைகள் ஏதும் ஏற்பட்டால் தனது காதலி சப்ரினா பிச்செலருக்கு அறிவிப்பதற்காக செல்லிடத் தொலைபேசியையும் எடுத்துச் சென்றுள்ளார்.
இவர் சாதனை படைப்பதை காண நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF