Tuesday, December 28, 2010

ஊனமானவர்களுக்கு ஒர் வரபிரசாதம் : ரோபோ இயந்திர கவச ஆடை!

உடல் உறுப்புக்களில் ஊனம் அல்லது இயலாமை உடையவர்களுக்கு நல்ல காலம் பிறந்து உள்ளது.
யப்பானிய விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு ஒன்றின் மூலம் இவர்கள் ஏனைய சாதாரண மனிதர்களைப் போல் செயல்பட கூடிய நிலைமை உருவாகி உள்ளது.
ரோபோ இயந்திர கவச ஆடை மூலம் இச்சாதனை சாத்தியம் ஆகி உள்ளது.
மூளைக்கும் இக்கவச ஆடைக்கும் இடையில் இலத்திரனியல் சமிக்ஞைகள் மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது.
மூளையின் கட்டளைப்படி கவச ஆடை செயல்படும்.
மனித உறுப்புக்கள் செய்கின்ற வேலையை இந்த கவச ஆடை செய்து கொள்ளும்.
அதாவது காலில் ஊனம் அல்லது இயலாமை உடைய ஒருவர் நடக்க வேண்டும் என்று நினைத்தால் போதும்.
இத்தகவல் மூளையில் இருந்து கவச ஆடைக்கு பரிமாறப்படும். கவச ஆடை அவ்வுத்தரவை ஏற்று செயல்படும்.
இதன் செயல்பாடுகள் சம்பந்தப்பட்ட பரிசோதனைக்ள் முழுமையாக வெற்றி பெற்று உள்ளன.
யப்பானில் உள்ள சுமார் 50 வைத்தியசாலைகள் மற்றும் முதியோர் இல்லங்களில் இந்த இயந்திர ஆடைகள் பாவனைக்கு வந்துள்ளன.
2015 ஆம் ஆண்டு இந்த இயந்திர ஆடைகள் சந்தைக்கு வரும். இவை மனித குலத்துக்கு மிகப் பெரிய வரப் பிரசாதமாக இருக்கும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF