அமெரிக்காவில் திவாலாகும் நிலையில் உள்ள வங்கிகளின் ரகசியங்களை வெளியிடப் போவதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கா மிரட்டல் விடுத்துள்ளார்.
அசாங்கா ஒரு உயர் தொழிற்நுட்ப தீவிரவாதி என்று அமெரிக்க அரசு அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்சுவீடன் பெண்கள் இருவரை வைத்து தமது செயல்பாட்டை முடக்க சதித்திட்டம் நடைபெறுவதாக குற்றம்சாற்றியுள்ளார்.
தமது பக்கம் நியாயம் இருப்பதால்தான் பிணையில் வெளிவந்துள்ளதாக தெரிவித்துள்ள அசாங்கா, நீதிக்காக தொடர்ந்து போராடப் போவதாக தெரிவித்துள்ளார்.
விக்கிலீக்ஸ் இணையதளத்தை முடக்க நினைத்தால் கடும் விளைவுகளை அமெரிக்க சந்திக்க நேரிடும் என்று அசாங்கா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக அளவில் பல கிளைகளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்க வங்கிகள் பெரும்பாலானவை திவாலாகும் நிலையில் இருப்பதாக ஜூலியன் அசாங்கா திடுக்கிடும் தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
அச்சுறுத்தல்கள் தொடருமானால் அந்த வங்கிகளின் கணக்கு விவரங்கள் பகிரங்கப்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.