
இலங்கையில் இயங்கும் இலத்திரனியவியல் ஊடகங்கள், தாம் ஒளி, ஒலிப்பரப்பாக்கும் ஒவ்வொரு பாடல்களுக்கும் கட்டணங்களை செலுத்தவேண்டும் என அமைச்சரவை தீhமானம் எடுத்துள்ளது. |
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்ற போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார். இதன்படி பாடகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் ஆகியோருக்கு அவர்களின் பாடல்கள் ஒளிஒலிப்ரப்பாகும் நேரங்களில் கட்டணங்கள் செலுத்தப்படவேண்டும். இதற்கான தீhமானம், புலமைசார் சொத்துடைமை சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், கலைஞர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, வானொலிகளில் ஒலிபரப்பாகும் ஒவ்வொரு பாடல்களுக்கும் அந்த பாடல்களின் பாடகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், தலா 3 ரூபாய்களை பெறுவர். தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பாடல்களுக்கு தலா 10 ரூபா செலுத்தப்படவேண்டும். |