Friday, December 10, 2010

விக்கிலீக்ஸுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்த நிறுவனங்களைத் தாக்கிய சிறுவன்


விக்கிலீக்ஸ் இணையத்திற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்த வீசா, மாஸ்டர் கார்ட் மற்றும் பேபேல் நிறுவன இணையத்தளங்களை தாக்கிய நெதர்லாந்து சிறுவனொருவன் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளான்.



விக்கிலீக்ஸ் இணையத்தளத்திற்கு மேற்படி நிறுவனங்கள் ஊடாக அதன் ஆதரவாளர்களால் நிதி வழங்கப்பட்டு வந்தது. எனினும் அந் நிறுவனங்கள் விக்கிலீக்கிற்கு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்திக்கொள்வதாக அண்மையில் அறிவித்திருந்தன.


இதனைத்தொடர்ந்து விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் ஆதரவாளர்கள் என நம்பப்படும் நபர்களால் மேற்படி இணையத்தளங்களின் நிறுவனங்கள் தாக்கப்பட்டன. இதனால் அதன் பாவனையாளர்களுக்கு பல மணித்தியாளங்களுக்கு அத்தளங்களுக்குள் பிரவேசிக்க முடியாமல் போனது.


இதனைத்தொடர்ந்து குற்றவாளிகளை கண்டறிய சர்வதேச ரீதியில் தேடல்கள் மேற்கொள்ளப்பட்டன.


பின்னர் இத்தாக்குதலுக்கு காரணமென நம்பப்படும் 16 வயதான சிறுவன் ஒறுவனை நெதர்லாந்து பொலிஸார் நேற்று அவனது வீட்டில் வைத்து கைதுசெய்துள்ளனர்.


மேற்படி சிறுவன் தனது தவறை ஒப்புக்கொண்டதுடன் ஒரு குழுவாகவே இந் நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளான்.


இது தொடர்பாக கருத்து தெரிவித்த நெதர்லாந்து பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றையவர்களும் விரைவில் கைதுசெய்யப்படுவர் எனவும் இதற்காக எப்.பி.ஐ இன் உதவி நாடப்படுமெனவும் தெரிவித்துள்ளனர்.


சிறுவனின் குற்றம் நிரூபிக்கப்படுமாயின் சுமார் 4 முதல் 6 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையை பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF