Thursday, December 9, 2010

பில்டிங், பேஸ்மென்ட் ஸ்டிராங்கா? செயற்கை புயல் சோதனை


லண்டன்: செயற்கையாக சூறாவளியை உருவாக்கும் ஆராய்ச்சி ஜப்பானில் நடத்தப்பட்டது. பலத்த வேகத்தில் காற்று வீசினாலும் கட்டிடங்கள் தாக்குப்பிடிக்கிறதா என்று சோதனை செய்ய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.



ஜப்பானை சேர்ந்த தேசிய நிலஉரிமை மற்றும் கட்டுமானப் பொருட்கள் நிறுவனம், கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், டோக்கியோ பல்கலைக்கழகம், கியோட்டோ பல்கலைக்கழக இயற்கை இடர்பாடுகள் ஆராய்ச்சி மற்றும் தீர்வு நிறுவனம் ஆகிய 4 நிறுவனங்கள் இணைந்து சூறாவளியை செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் இறங்கின.


அதிக வேகத்தில் வீசும் சூறாவளியானது பெரும் மரங்களையும் வேரோடு பிடுங்கிப்போடும். வீட்டின் கூரைகளை பிய்த்து எரியும். பலமான கட்டிடங்களும் இதற்கு தப்பாது. நிற்கும் கார்களை தூக்கி எறியும். இத்தகைய சக்தி வாய்ந்த சூறாவளியை செயற்கையில் உருவாக்குவதுதான் அவர்களது முயற்சி. விஞ்ஞானி கிகிட்சூ தலைமையில் இந்த சோதனை நடந்தது. மணிக்கு 55 முதல் 75 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்றை வீசச் செய்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.


இந்த ஆய்வு பற்றி கிகிட்சூ கூறுகையில், ‘‘ஜப்பானில் இந்த சோதனை முதல்முறையாக நடத்தப்படுகிறது. கட்டிடங்களின் மாதிரிகளை உருவாக்கி அதை சூறாவளி சேம்பரில் வைத்து சோதனை செய்யப்படும். அதிக வேகத்தில் சூறைக்காற்று வீசினாலும் கட்டிடம் உறுதியாக இருக்கிறதா என்று சோதனை செய்யப்படும். விழிப்புணர்வு அதிகரிக்கும் என்பதால் கட்டுமான நிறுவனங்கள் தரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும்’’ என்றார். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF