Wednesday, December 15, 2010
ஒரே நேரத்தில் 8 குண்டுகளை சுட முடியும்: 160 கி.மீ. தூரம் சுடும் அதிநவீன துப்பாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரிப்பு
உலகில் பலவிதமான அதிநவீன துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது 160 கிலோ மீட்டர் தூரத்தில் இலக்கை குறி பார்த்து சுட்டு அழிக்க கூடிய அதிநவீன துப்பாக்கியை அமெரிக்க விஞ்ஞானிகள் தயார் செய்துள்ளனர்.
இந்த துப்பாக்கியில் இருந்து ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக 8 குண்டுகளை சுட முடியும். இவை குறிப்பிட்ட இலக்கை மிகவும் துள்ளியமாக பலத்த சத்தத்துடன் தாக்கும் திறன் கொண்டவை.
தற்போது அமெரிக்க போர்க் கப்பல்களில் 20 கிலோ மீட்டர் இலக்கு பாய்ந்து சென்று சுடக்கூடிய துப்பாக்கி பயன்படுத்தப்படுகிறது. இது மற்றொரு எதிரி கப்பலை தாக்க கூடியது. இதை தொடர்ந்து இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் அதாவது 2025-ம் ஆண்டுகளில் இந்த அதி நவீன துப்பாக்கி அமெரிக்க கப்பற்படையில் இணைக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீடியோ கேம்ஸ் விளையாட்டுகளில் பார்க்கும் இந்த அதிநவீன துப்பாக்கி விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF