Saturday, December 25, 2010

ஈகுவேடரில் பஸ் கவிழ்ந்ததில் 41 பேர் சாவு; கிறிஸ்துமஸ் கொண்டாட சென்றவர்கள்



தென் அமெரிக்காவில் உள்ள ஈகுவேடர் நாட்டின் தலைநகரான கொய்டோவில் இருந்து சோன் மற்றும் கான் லிசிட்ரோ ஆகிய நகரங்களுக்கு பயணிகள் பஸ்சில் பயணம் செய்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் புறப்பட்டு சென்றனர். மனாபி அருகே பிளாவியோ அல்பாரா என்ற இடத்தில் சென்ற போது பஸ் பள்ளத்தாக்கில் தலை குப்புற கவிழ்ந்தது.

இதனால் பஸ் சுக்கலாக நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 41 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 7 பேர் குழந்தைகள். மேலும் 30 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும் பாலானவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பஸ்சில் அளவுக்கு அதிகமான பயணிகள் ஏற்றப்பட்டிருந்தனர்.

மேலும் பஸ்சில் பிரேக் பிடிக்காததால் கட்டுப் பாட்டை இழந்து அங்கு மிங்கும் தறிகெட்டு ஓடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே பஸ் விபத்தில் இறந்தவர்களுக்கு ஈகுவேடர் அதிபர் ரபேல் கோரியா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF