Tuesday, December 21, 2010

அபுதாபியில் பிரபல ஆடம்பர ஓட்டலில் ரூ. 90 கோடியில் கிறிஸ்துமஸ் மரம்




அபுதாபி : அபுதாபியில் பிரபல ஆடம்பர ஓட்டலில் ரூ.90 கோடி மதிப்பில் தங்கம், ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அபுதாபியில் உள்ள ஓட்டல்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி மரபு ரீதியாக கிறிஸ்துமஸ் மரம் வைப்பது வழக்கம். மேலும் அவ்வாறு வைக்கப்படும் மரத்தை மின்விளக்கு, போன்ற அலங்கார பொருட்களால் அலங்கரிப்பதில்லை.

ஆனால், அங்குள்ள ஆடம்பர ஓட்டல் ஒன்றில் வைக்கப்பட்டு இருந்த கிறிஸ்துமஸ் மரம் தங்கம், வைரம், பல்வேறு நவரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வழக்கத்துக்கு மாறாக அதிகப்படியான ஆபரணப் பொருட்கள் ஆக்கிரமித்து அந்த மரமே தெரியாத அளவிற்கு மூடப்பட்டு இருந்தது. மரபை மீறி ஆடம்பரத்தை பிரதிபலிப்பதாக இருப்பதுடன் பார்வையாளர்களை கவர்வதற்காக உருவாக்கப்பட்டது போல் உள்ளது. மேலும் இது தவறான ரசனையை வெளிப்படுத்துவதாக கூறி சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து ஓட்டல் நிர்வாகி ஒருவர் கூறுகையில், கிறிஸ்துமஸ் மரம் தங்கம், வைரம் உட்பட நவரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டு ஓட்டலின் மையப்பகுதியில் வைக்கப்பட்டு உள்ளது. பண்டிகையை முன்னிட்டு ஓட்டலில் வைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் மரபை மீறியதாக இருந்தால் அதற்காக வருந்துகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF