
வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் அனுப்பிய ரகசிய தகவல்களை திரட்டி விக்கிலீக்ஸ் வெப்சைட்டில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்.
அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளானதால், விக்கிலீக்ஸ் வெப்சைட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. ஸ்வீடன் பெண்கள் இருவர் கூறிய, பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இப்போது லண்டன் சிறையில் உள்ளார்.
ஜூலியன் அசாஞ்சுக்கு ஆஸ்திரேலியா உள்பட பல தரப்பில் இருந்தும் ஆதரவு குவிந்து வருகிறது. இவரது முயற்சிக்கு ஆஸ்கர் விருதே வழங்கலாம் என ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜூலியன் அசாஞ்ச் குறித்து அவரது வளர்ப்புத் தந்தை பிரட் அசாஞ்ச் கூறியதாவது:
சிறு வயதிலேயே ஜூலியன் படு புத்திசாலியாக விளங்கினான். தான் செய்வது சரி என்பதில் உறுதியாக இருப்பான். மற்றவர்களுக்கு எதிராக பள்ளி நண்பர்கள் அணி சேர்ந்தால், ரொம்ப கோபப்படுவான். அதே நேரத்தில் நகைச்சுவை உணர்வு அவனிடம் அதிகம் இருந்தது.
சிறுவனாக இருந்தபோது, மரத்தில் இருந்து ஒரு முறை ஜூலியன் கீழே விழுந்தான். அப்போது கை முறிந்தது. ஆனால் அவன் அழவில்லை. தனது வலியை, உணர்வுகளை வெளிகாட்ட அவன் விரும்பவில்லை. அதனால் அவன் இப்போது செய்துள்ள காரியம் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை.இவ்வாறு பிரட் அசாஞ்ச் கூறினார். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF