Sunday, December 19, 2010

எகிப்தில் ஸ்பிங்ஸ் சிலைகள் உள்ள தெரு கண்டுபிடிப்பு


எகிப்து நாட்டில் லக்ஸர் என்று ஒரு பகுதி உள்ளது. இங்கு ஸ்பிங்ஸ் வகை சிலைகள் வரிசையாக அமைந்த தெரு ஒன்று 2-வது முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் மனித அல்லது மிருக தலையும், சிங்கத்தின் உடலையும் கொண்டிருக்கும். இது 4-ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என கண்டறியப்பட்டு உள்ளது. எகிப்து நாட்டில் பாலைவன மணலால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதைந்த 12 ஸ்பிங்ஸ் சிலைகளை தற்போது தொல்லியல் துறை வெளி கொண்டு வந்துள்ளனர். இந்த தெருவில் ஏறத்தாழ 100 சிலைகள் இன்னும் மீதி இருக்கும் என்கிறார்கள். மேலும் இந்த தெருவின் வழியாக பழங்கால எகிப்தியர்கள், வருடத்திற்கு ஒரு முறை தங்களது கடவுள்களான ஆமன் மற்றும் மட் ஆகியோரின் சிலைகளை கொண்டு சென்றுள்ளதாக தெரிகிறது. அதன் பின்பு இந்த பாதையினை ரோமானியர்கள் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் பின்னர் ராணி கிளியோபாட்ரா இந்த தெருவை புதுப்பித்து லக்ஸரில் உள்ள கோயில் ஒன்றில் தனது பெயர் கொண்ட அடையாள சின்னத்தை பொறித்து வைத்ததாகவும் நம்பபடுகிறது. வரும் பிப்ரவரி மாதம், இந்த சிலைகள், சுற்றுலா பயணிகளுக்காக திறந்த வெளி மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட இருக்கின்றன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF