Tuesday, December 7, 2010
" விரைவில் வெளியேறி விடுவோம் " - ஆப்கனில் பிரித்தானிய படைகளை திடிரென சந்தித்த கேமரூன் சூசகம்
முன்னரே அறிவிக்காமல் திடிரென இன்று ஆப்கானிஸ்தான் சென்ற கேமரூன் அங்குள்ள பிரித்தானிய படை வீரர்களை சந்தித்துள்ளார். பிரதமரின் திடீர் விஜயம் பிரித்தானிய ராணுவ வீரர்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது.
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டி இருப்பதைப் பற்றி பிரித்தானிய ராணுவப் படையினரிடம் பேசிய அவர் கூடிய விரைவில் ஆப்கனை விட்டு வெளியேற பிரிட்டன் படைகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
சர்வதேச நாடுகள் தங்கள் படைகளை 2014 க்குள் திரும்பப் பெறப் போவதாக முன்னர் அறிவிப்பு வெளியாகியிருந்தது. பிரித்தானிய படைகள் 2015 க்குள் ஆப்கனை விட்டு வெளியேறும் என கேமரூனும் அறிவித்திருந்தார்.
ஆனால் நேற்று நடைபெற்ற திடீர் சந்திப்பில் 2011 ஆம் ஆண்டிற்குள்ளேயே ஆப்கனை விட்டு வெளியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறதென தெரிவித்துள்ளார்.
பிரதமரின் இந்த அறிவிப்பு விரைவில் படைகளை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்களின் மத்தியில் மிகுந்த மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF