Tuesday, December 7, 2010
சீனாவில் கூகுள் சிதைக்கப்பட்டது ஏன்? விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசியம்
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளை பற்றிய ரகசியங்களையும், அந்த நாட்டு தலைவர்களை பற்றிய ரகசியங்களையும் அமெரிக்க தூதரகங்கள் திரட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தன. இந்த ரகசியங்களையும் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையடுத்து இணையதள சேவை வழங்கும் அமேசான், விக்கிலீக்ஸுடனான தனது ஒப்பந்தத்தை ரத்துசெய்துவிட்டது.விக்கிலீக்ஸ் இணையதளம் முடக்கப்பட்டது.
தற்போது நன்கொடைகளைப் பெற விக்கிலீக்ஸ் பயன்படுத்திவந்த கணக்கை பேபால் ரத்து செய்துவிட்டது. இதனால் விக்கிலீக்ஸ் தனது பெரும் வருவாய் ஆதாரத்தை இழந்துள்ளது.
இணையதளத்தை தக்கவைக்க விக்கிலீக்ஸ் போராடி வருகிறது.
இந் நிலையில் பிரபல தேடுபொறி இணையதளமான கூகுள், சீனாவில் சிதைக்கப்பட்டதற்கான காரணத்தை விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது.விக்கிலீக்ஸை மேற்கோள் காட்டி பிரிட்டனில் இருந்து வெளிவரும் ’கார்டியன்’நாளிதழில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
சீனாவில் தனது இணையதளம் தொடர்ந்து சில விஷமிகளால் சிதைக்கப்பட்டதாலும், இணையதள தகவலுக்கு அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை விதித்ததாலும் சீனாவுக்கான தனது சேவையை கூகுள் மூடிவிட்டது. ஆனால், இந்த நடவடிக்கைகளுக்கான பின்னணி காரணத்தை விக்கிலீக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.
சீன ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட நிர்வாக குழுவான பொலிட்பீரோவில் 5-வது முக்கியத் தலைவராக இருப்பவர் லீ சங்சன்.
கூகுள் இணையதளத்தில் அவர் தனது பெயரை டைப் செய்து தேடியபோது அவரைப் பற்றி கடுமையாக விமர்சித்து எழுதப்பட்ட ஏராளமான இணையதளப் பக்கங்களின் தொடர்புகள் வந்துள்ளன.
இதனால், கோபமடைந்த அவர் கூகுள் இணையதளத்தை சட்டவிரோதமாக சிதைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று விக்கிலீக்ஸ் இணையதளம் தற்போது அம்பலப்படுத்தியுள்ளது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF