Wednesday, December 8, 2010

இறைச்சிக்கறியில் எலி - பங்களாதேஷ் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு


பங்களாதேஷில் உள்ள பிரபல பல்கலைக்கழக சிற்றுண்டிச் சாலையொன்றில் பரிமாறப்பட்ட கோழி இறைச்சிக்கறியில் எலியொன்றின் தலை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



திங்கட்கிழமை பகல் மாணவர் ஒருவர் உணவு உட்கொண்டிருந்த வேளையில் தனக்கு பரிமாறப்பட்ட கோழிக்கறியில் எலியின் தலை இருப்பதை அவதானித்துள்ளதுடன் உடனடியாக சுகயீனத்திற்கும் உள்ளாகியுள்ளார்.


இதனைத்தொடர்ந்து மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.


இதனால் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


மேலும் இச்சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் அப்பள்ளி தலமை சமையல்காரரிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


தெற்கு பங்களாதேஷில் அமைந்துள்ள ரக்ஷஹி பல்கலைக்கழகத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி கல்லூரி அந்நாட்டில் உள்ள 2 ஆவது பெரிய கல்லூரி மட்டுமன்றி அங்கு சுமார் 25,000 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.


ஏற்கனவே கல்லூரி சிற்றுண்டிச்சாலையில் உணவுப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.


எலிகள் பங்களாதேஷில் அதிகமாக பெருகியுள்ளமையும் அவை அங்கு சர்வசாதரணமாகும்.


அந்நாட்டு உணவுத் திணைக்களம் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையொன்றில் பங்களாதேஷில் உள்ள கல்லூரிகளின் சிற்றுண்டிச் சாலைகளில் உணவுகள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதில்லை எனக் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF