
எதிர்வரும் டிசம்பர் 21 ம் திகதி அதிகாலையில் வடக்கு அமெரிக்காவில் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. மேற்கு கோளார்த்தத்தில் அதிகாலை 12:29 மணிக்கு தெரியும் என நாசா கணித்துள்ளது. 72 நிமிடங்களுக்கு இது நீடிக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்திர கிரகணம் என்பது நிலவு பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும்.
இது சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகியவை, மிகத்துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே ஏற்படும்; இது ஏற்படுவதற்கு பூமி இடையில் அமைந்திருக்க வேண்டும்.
இதனால், சந்திர கிரகணத்தின் அன்று இரவில் எப்போதும் முழு நிலவாக இருக்கும். கிரகணத்தின் வகை மற்றும் நீளம், நிலவின் இடம் அதன் சுற்றுப்பாதைகளில் எங்கிருக்கிறது என்பதைச் சார்ந்து இருக்கும்.
டிசம்பர் 21 ஆம் திகதி ஏற்படவுள்ள கிரகணத்தை வட அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவில் மட்டுமே முழுமையாகப் பார்க்க முடியும். தெற்கு மற்றும் கிழக்கு ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், தெற்காசியா பகுதிகளில் இதனை காண முடியாது. அடுத்த முழுமையான சந்திர கிரகணம் ஏப்ரல் 15, 2014 இல் ஏற்பட இருக்கிறதென்பது குறிப்பிடத்தக்கது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF