ஈரானின் கடற்படையினரால் பெருந்தொகையான தற்கொலைப் படகுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பயங்கர வெடிமருந்துகள் இணைக்கப்பட்ட 9000 க்கும் அதிகமான வேகப் படகுககளை ஈரானின் கடற்படை உருவாக்கியுள்ளது.
இந்தப் படகுகள் பாரசீக வளைகுடாப் பிரதேசத்தில் காவல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இந்தப் பிரதேசத்தில் தான் பிரிட்டிஷ் கடற்படைக் கப்பல்களும் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தற்கொலைப் படகுகள் அனைத்திலும் தீவிர தற்கொலைப் போராளிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எதிரிக் கப்பல் ஒன்றில் மூர்க்கமாகப் பாயும் ஆற்றல் கொண்ட இந்தப்படகுகள் ஒரு கப்பலில் ஏழு மீட்டர் ஆழமான குழியை ஏற்படுத்தும் அளவுக்கு வெடிமருந்துகளைக் கொண்டவை.
ஈரானியப் போர்க்கப்பல்களையும். இத்தகைய படகுகளையும் கையாளக் கூடிய 30, 000 கப்டன்களும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். ஆறு மீட்டர் நீளம் கொண்ட 15, 000 கப்பல்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவை பெரிய கப்பல்களை இலக்கு வைத்துத் தாக்கக்கூடிய சி 4 ரக வெடிமருந்துகளையும் கொண்டிருக்கும். இவற்றை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதிருப்தியாளர் ஒருவர் நாட்டிலிருந்து தப்பிச் சென்று இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இவர் ஒரு முன்னாள் இராணுவப் பொறியியலாளராவார். ஈரானின் இச்செயற்பாடு அமெரிக்காவுக்கு விழுந்த பலத்த அடியாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF