Thursday, December 9, 2010

ரத்த பரிசோதனை மூலம் இதய நோயை அறிய முடியும்


மனித உயிரை குடிக்கும் நோய்களில் இதய நோயும் ஒன்று. ரத்தத்தில் ஏற்படும் அதிகப்படியான கொழுப்பு சத்து, ரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் உண்டாகின்றன.



இந்த நோய்கள் ஏற்படுவதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பே ரத்த பரிசோதனையின் மூலம் கண்டறிய முடியும். இந்த தகவலை டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். பொதுவாக, ரத்தத்தில் புரோட்டீன் அளவு குறைவதாலும், கார்டியாக் டிரபோனின்-டி என்ற மூலக்கூறு இருப்பதாலும் தான் கடுமையான மாரடைப்பு ஏற்படுகிறது. என ஏற்கனவே நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.


தற்போது டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய புதிய ஆய்வில் மாரடைப்பை உண்டாக்கும் இவை ரத்தத்தில் உருவாகி இருப்பதை 6 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிய முடியும் என தெரிய வந்துள்ளது.


இதே கருத்தை தான் டெக்சாஸ் பல்கலக்கழக மற்றொரு விஞ்ஞானி பேராசிரியர் ஜேம்ஸ் டி லெமாஸ் நடத்திய ஆய்வும் தெரிவிக்கிறது. எனவே, ரத்த பரிசோதனை மூலம் மாரடைப்பு உள்ளிட்ட கொடூர இதய நோய்களை கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெளிவு படுத்தியுள்ளனர்.


கொழுப்பு சத்து, ரத்த அழுத்தம் போன்றவற்றை குறைக்க மருந்து, மாத்திரைகள் பயன்படுத்து வதை விட ரத்த பரிசோதனை செய்து கொண்டு உணவு கட்டுப் பாட்டின் மூலம் சரி செய்யலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF