Thursday, December 9, 2010
சிலி நாட்டில் சிறையில் தீ விபத்து : உடல் கருகி 83 கைதிகள் பலி
சிலி நாட்டின் தலை நகரான சாண்டியாகோவில் உள்ள சான்மிகியூஸ் என்ற இடத்தில் சிறைச்சாலை உள்ளது. அதில் 2900 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை அங்கு திடீரென தீப்பிடித்தது. சிறை சாலைக்குள் தீ கொளுத்து விட்டு எரிந்தது. உள்ளே இருந்து குபு குபுவென கரும்புகை வெளி யேறியது. இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்தும் இந்த விபத்தில் உடல் கருகியும், மூச்சு திணறியும் 83 கைதிகள் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீப்பிடித்த இந்த சிறை 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு அளவுக்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று காலை சிறையின் ஒரு பகுதியில் கைதிகள் இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது. இதன்போது அவர்களில் ஒரு கும்பல் சிறைக்கு தீ வைத்தது. அந்த தீ சிறை முழுவதும் மளமளவென பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தீயில் கருகியவர்களை விட புகையில் மூச்சு திணறி பலர் இறந்ததாக தெரிகிறது. தீ விபத்தில் சிறை கைதிகள் இறந்த செய்தி அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.
எனவே அவர்களது குடும்பத்தினர் பெருந்திரளாக சிறை முன்பு கூடி விட்டனர். ஆத்திரத்தில் சிறை அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் தனக்கு மிகப் பெரிய வேதனை அளிப்பதாக சிலி அதிபர் செபஸ்டியன் பினேரா தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF