அமெரிக்காவிற்கு எதிரான ஆதாரங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் இணையதளத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கியதற்கு தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வகையில் உலகின் மிகப்பெரிய வங்கிக் கடன் அட்டைகளான மாஸ்டர் கார்டு, பே பால் ஆகியவற்றை முற்றிலுமாக செயல் இழக்கச் செய்யும் வேலைகளில் இணையத் திருடர்கள் இறங்கியுள்ளனர்.
பெயர் தெரியாத சர்வதேச குழு ஒன்று இந்த வேலைகளில் இறங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுளள்து. விக்கிலீக்ஸின் வங்கிக் கணக்குகளை அனுமதிக்கும் வரை இந்த தாக்குதல் தொடரும் என சைபர் போரை இணையத் திருடர்கள் ஆரம்பித்துள்ளதால் உலகம் முழுதிலும் உள்ள மாஸ்டர் கார்டு, பே பால் வங்கி கடன் அட்டைகள் ஆறு மணி நேரங்களுக்கு முடங்கியது.
உலகில் உள்ள முக்கிய அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தமைக்காக விக்கிலீக்ஸ் இணையதளத்தை முடக்கினால் மக்கள் அனைவரும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடத்த தயாராக உள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் லண்டனில் தெரிவித்துள்ளார். விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பலர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.