Sunday, December 5, 2010

அதிபர் கர்சாயுடன் லடாய் ஆப்கனுக்கு ஒபாமா திடீர் ரகசிய பயணம்



வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமா, ஆப்கானிஸ்தானுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ரகசியமாக வந்தார். எந்த முன்னறிவிப்பும் இன்றி வியாழன் இரவு அமெரிக் காவை விட்டு புறப்பட்ட ஒபாமா, 13 மணி நேர தொடர் பயணம் மேற்கொண்டு, ஆப்கன் வந்தார். இந்த விவரம் வெள்ளை மாளிகை அதிகாரிகள் பலருக்கே தெரியாது. ஆப்கா னிஸ்தானின் பக்ரம் விமானப்படை தளத்தில் நள்ளிரவில் ஏர்போர்ஸ் ஒன் விமானம் தரையிறங்கியது.

அமெரிக்க ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து, ஆப்கன் அதிபர் கர்சாய் சமீபத்தில் புகார் கூறினார். அவரது அரசின் ஊழல் குறித்து அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்த கரு த்தை விக்கிலீக் அம்பலப்படுத்தியது. இதனால், அமெரிக்கா மீது அதிருப்தியில் உள்ளார் கர்சாய். அந்த முரண்பாடுகளை போக்கவும், அமெரிக்க ராணுவ உயரதிகாரிகளை நேரில்  சந்தித்து பேசவும், வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் ஒபாமா வந்ததாக கூறப்பட்டது. விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காபூல் சென்று, கர்சாயை சந்திக்க ஒபாமா திட்டமிட்டிருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக திட்டம் கைவிடப்பட் டது.

ராணுவ முகாமில் இருந்தே போனில் கர்சாயிடம் பேசிய ஒபாமா, எல்லா பிரச்னைகளையும் தீர்ப்பதாக உறுதியளித்தார்.
ராணுவ முகாமில் அதிபர் ஒபாமாவை வீரர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களிடையே ஒபாமா பேசுகையில், இது கடுமையான சவால் என்பது நமக்கு தெரியும். தலி பான்கள் அட்டகாசத்தை ஒழிப்போம் என்று கூறினோம். அதை செய்து கொண்டிருக்கிறோம்.

தீவிரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் இனி இருக்கக் கூடாது. ஆப்கன் அர சிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் பணிகள், அடுத்த ஆண்டு தொடங்கும். 30 கோடி அமெரிக்கர்கள் சார்பாக உங்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன் என்றார். 
எனினும், ஒபாமாவின் ஆப்கன் பயணம் ரகசியமானது அல்ல என்றும் 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டதுதான் என்றும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF