கடந்த திசம்பர் 5 ஆம் திகதி ஜியாங் நகரில் 6 ரோபோக்களுடன் வித்தியாசமான உணவகத்தை இந்நிறுவனம் தொடங்கியது. இதற்கு மக்களின் ஏகோபித்த ஆதரவும் கிட்டியுள்ளதாக இந்நிறுவனம் தெரிவிக்கின்றது.
இவ்வுணவகத்தில் உள்ள சிறப்பு வாடிக்கையாளரை வரவேற்பதில் இருந்து உணவு பரிமாறி வாடிக்கையாளரை வாசலுக்கே சென்று வழியனுப்புவது வரைக்கும் அத்தனை வேலைகளையும் இந்த ரோபோக்களே செய்யும் என்பதாகும். எதிர்காலத்தில் 40 வரையான ரோபோக்களை பயன்படுத்த உத்தேசிள்ளதாக இதன் நிறுவுனர் தெரிவித்தார்








