Tuesday, October 4, 2011
100 மடங்கு அதிகம் செவ்வாய் கிரகத்தில் எங்கும் தண்ணீர்; விஞ்ஞானிகள் ஆச்சரியம்...
செவ்வாய் கிரகத்தில் எதிர்பார்த்ததை விட 100 மடங்கு அதிகம் தண்ணீர் இருப்பதாக விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி, மற்றும் சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள் குழுவினர் “சிவப்பு கிரகம்” என அழைக்கப்படும் செவ்வாய் கிரகம் குறித்து ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர். அந்த கிரகத்தின் காற்று மண்டலத்தில் உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்தனர். அவை ஓரளவு தான் உள்ளது என விஞ்ஞானிகள் கணித்து இருந்தனர்.
ஆனால் தற்போது செவ்வாய் கிரகத்தின் காற்று மண்டலத்தில் அவை ஆவி நிலையில் பறந்து விரிந்து கிடக்கிறது. துகள்கள் மற்றும் தூசிகள் போன்று காற்றில் மிதக்கின்றன. அவை காற்று மண்டலத்தில் ஆங்காங்கே மேக கூட்டம் போன்று இருக்கின்றன. எனவே செவ்வாய் கிரகத்தில் எங்கும் தண்ணீர் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முன்பு கணித்ததை விட 100 மடங்கு அதிகம் தண்ணீர் இருப்பதாக தற்போது அறிவித்துள்ளனர். இந்த ஆய்வை “சிப்காம்” என்ற கருவியின் மூலம் நடத்தி தண்ணீர் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF